12,800 செல்டோஸ் கார்களை விற்று சாதனை படைத்த கியா மோட்டார்ஸ்

kia seltos

இந்தியாவில் கியா மோட்டார்ஸ் வெளியிட்ட முதல் மாடலான செல்டோஸ் எஸ்யூவி இந்த பிரிவில் அதிகம் விற்பனை ஆகின்ற மாடல் என்ற பெருமையை பெற்றுள்ளது. விற்பனைக்கு வெளியிடப்பட்ட மூன்று மாதங்களுக்குள் இந்த சாதனையை இந்நிறுவனம் படைத்துள்ளது. விற்பனைக்கு வெளியிடப்பட்ட முதல் ஆகஸ்ட் மாதத்தில் 6,236 யூனிட்டுகளும், செப்டம்பரில் 7,754 யூனிட்டுகளை பதிவு செய்திருந்தது.

பண்டிகை காலத்தில் மற்ற முன்னணி நிறுவனங்களில் மாருதியை தவிர மற்ற நிறுவனங்கள் பெரிய அளவில் வீழ்ச்சியில் இருந்து மீளாத நிலையில், கியா நிறுவனம் செல்டோஸ் கார் மூலம் 12 ஆயிரத்து 800 எண்ணிக்கையில் டெலிவரி வழங்கியுள்ளது. மேலும் இந்நிறுவனம் 60,000க்கு மேற்பட்ட முன்பதிவுகளை பெற்றுள்ளது. குறிப்பாக செல்டோஸ் காரானது புதிய எம்ஜி ஹெக்டர், டாடா ஹாரியர், ஹூண்டாய் கிரெட்டா, நிசான் கிக்ஸ் மற்றும் ரெனோ கேப்டூர் போன்ற மாடல்களுடன் மஹிந்திரா எக்ஸ்யூவி 500 எஸ்யூவி போன்றவற்றை எதிர்கொள்கின்றது.

புதிய 1.4 லிட்டர் GDI டர்போ பெட்ரோல் என்ஜின் அதிகபட்சமாக குதிரைத்திறன் 138 bhp மற்றும் 242 Nm டார்க் வெளிப்படுத்தும். இந்த மாடலில் 6 வேக மேனுவல் மற்றும் 7 வேக டியூவல் கிளட்ச் ஆட்டோ கியர்பாக்ஸ் இடம்பெற்றிருக்கும்.

இந்த என்ஜின் 9.7 வினாடிகளில் 0-100 கிமீ வேகத்தை எட்டும், மேலும், 16.1 கிமீ (MT) மற்றும் 16.2 கிமீ (DCT) மைலேஜ் வழங்கப்படும். குறிப்பாக இந்த என்ஜின் ஜிடி லைன் தொடரில் மட்டும் கிடைக்க உள்ளது.

1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின், அதிகபட்சமாக 113 பிஹெச்பி மற்றும் 144 என்எம்  டார்க்கை உருவாக்குகிறது. இந்த என்ஜின் 6 வேக மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் ஐவிடி (IVT – Intelligent continuously variable transmission) ஆட்டோ டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டுள்ளது, இந்த மாடல் மைலேஜ் 16.4 கிமீ (MT) மற்றும் 16.3 கிமீ (AT). மேலும், இந்த என்ஜின் 0-100 கிமீ வேகத்தினை எட்டுவதற்கு 11.8 வினாடிகளில் எடுத்துக் கொள்ளும்.

இறுதியாக, புதிய 1.5-லிட்டர் VGT டீசல் என்ஜினைப் பொறுத்தவரை, 113 பிஹெச்பி மற்றும் 250 என்எம் டார்க்கை உருவாக்க வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், 6 ஸ்பீட் மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் 6-ஸ்பீட் டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் கியர் பொருத்தப்பட்டுள்ளது. டீசல் மாடல் வெறும் 11.5 வினாடிகளில் 0-100 கிமீ வேகத்தை பெற முடியும். செல்டோஸ் டீசல் கார் மைலேஜ் 17.8 கிமீ (AT) மற்றும் 20.8 கிமீ (MT) ஆகும்.

கியா செல்டோஸ் எஸ்யூவி விலை ரூபாய் 11.22 லட்சம் முதல் ரூபாய் 19.38 லட்சம் விலைக்குள் சென்னை ஆன்ரோடு வந்துள்ளது.

இந்நிறுவனம், அடுத்த 6 மாதங்களுக்குள் கியா கார்னிவல் எம்பிவி மற்றும் வென்யூ அடிப்படையிலான கியா 4 மீட்டருக்கு குறைவான எஸ்யூவி கார் அடுத்த ஆண்டின் மத்தியில் வெளியாகலாம்.

Exit mobile version