Automobile Tamilan Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Notification
Automobile Tamilan Automobile Tamilan
Search
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Follow US
Auto Industry

திவாலாகும் நிலையில் கேடிஎம் நிறுவனம்..!

By Automobile Tamilan Team
Last updated: 28,November 2024
Share
SHARE

2025 ktm 390 smc r

இந்தியா மட்டுமல்லாமல் சர்வதேச அளவில் மிகவும் பிரபலமாக விளங்குகின்ற கேடிஎம் சூப்பர் பைக் நிறுவனம் மிகப்பெரிய நிதி நெருக்கடியில் சிக்கி தவிப்பதனால் இதனுடைய நிர்வாக ரீதியான பல்வேறு சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட உள்ளதாலும் அடுத்த 90 நாட்களில் கேடிஎம் நிறுவனத்தின் எதிர்காலம் தீர்மானிக்கப்பட உள்ளதாக அறிக்கை வெளியாகி உள்ளது.

Pierer Mobility AG கீழ் செயல்படுகின்ற ஹஸ்குவர்னா, கேஸ்கேஸ், எம்வி அகுஸ்டா, ஆகியவற்றுடன் கேடிஎம் நிறுவனமும் ஒன்றாகும். மேலும் கேடிஎம் நிறுவனத்தில் Pierer Mobility AG மட்டுமல்ல இந்தியாவின் பஜாஜ் ஆட்டோ நிறுவனமும் பங்குகளை கொண்டுள்ளது.

Pierer Mobility குழுமம் ஜனவரி, பிப்ரவரி 2025 என இரண்டு மாதங்களுக்கு பைக்குகளின் உற்பத்தியை இடைநிறுத்த முடிவு செய்துள்ளதாக கூறப்படும் நிலையில், ஏற்கனவே நூற்றுக்கணக்கான ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது.

கேடிஎம் 2024 ஆண்டுக்கு பிறகு செயல்பாடுகளைத் தொடர குறைந்தபட்சம் 100 மில்லியன் யூரோக்களைக் தேவைப்படுதவதாக கூறப்படுகிறது. தேவையான நிதி இலக்கை தற்பொழுது வரை அடையவில்லை.

“குழுவை மறுசீரமைப்பது நீண்ட காலத்திற்கு KTM குழுமத்தின் வளர்ச்சி, தொடர்ச்சியான இருப்பைப் பாதுகாப்பது மட்டுமல்லாமல், செயல்பாட்டில் இருந்து வலுவாக வெளிப்படுவதற்கான அடிப்படையையும் உருவாக்க வேண்டும்” என்று Pierer Mobility அறிக்கையில் தெரிவித்துள்ளது.

தற்போதைய நிதிச் சிக்கல்களுக்கு மத்தியில் நிறுவனத்தை மறுசீரமைக்க 90 நாள் சுயநிர்வாக காலத்திற்குள் நுழைவதாக அறிவித்துள்ளது.

புதிதாக நியமிக்கப்பட்ட இணை-தலைமை நிர்வாக அதிகாரி Gottfried Neumeister உடன் இணைந்து ஒரு அறிக்கையில், Pierer பேசுகையில் “கடந்த மூன்று தசாப்தங்களில், நாங்கள் ஐரோப்பாவின் மிகப்பெரிய மோட்டார் சைக்கிள் உற்பத்தியாளராக வளர்ந்துள்ளோம்.

“எங்கள் தயாரிப்புகள் மூலம் உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களை நாங்கள் ஊக்குவிக்கிறோம். இப்போது நாம் எதிர்காலத்திற்காக ஒரு பிட் ஸ்டாப் எடுக்கிறோம். கேடிஎம் பிராண்ட் எனது வாழ்க்கையின் வேலை, அதற்காக நான் போராடுவேன்.

bmw ix1 electric
இந்தியாவில் 5,000 எலக்ட்ரிக் வாகனங்களை விற்பனை செய்த பிஎம்டபிள்யூ குழுமம்
மீண்டும் பஜாஜ் ஆட்டோவின் சேட்டக் இ-ஸ்கூட்டர் உற்பத்தி சீரானது.!
E20 பெட்ரோலுக்கு எதிரான பொது நல வழக்கு தாக்கல்.!
வரத்தக வாகனங்களை டொமினிக்கன் குடியரசில் வெளியிட்ட டாடா மோட்டார்ஸ்
தென்னாப்பிரிக்கா சந்தையில் நுழைந்த டாடா மோட்டார்ஸ்
TAGGED:KTM 1290 Super Duke RKTM 390 Adventure
Share This Article
Facebook Whatsapp Whatsapp
Share
Follow US
16.8kFollowersLike
1kFollowersFollow
1kFollowersFollow
45.7kSubscribersSubscribe
10.9kFollowersFollow
2025 Royal Enfield Guerrilla 450 new
Royal Enfield
ராயல் என்ஃபீல்டு கொரில்லா 450 பைக் விலை, மைலேஜ் மற்றும் சிறப்பம்சங்கள்
2025 hero karizma xmr 210 combat edition
Hero Motocorp
ஹீரோ கரீஸ்மா XMR 210 பைக்கின் விலை, மைலேஜ், படங்கள் மற்றும் சிறப்புகள்
2025 honda shine 100 obd-2b
Honda Bikes
ஹோண்டா ஷைன் 100 பைக் விலை, மைலேஜ், மற்றும் சிறப்பம்சங்கள்
2024 bajaj pulsar ns200 headlight
Bajaj
2024 பஜாஜ் பல்சர் NS200 பைக் விலை, மைலேஜ் மற்றும் சிறப்பு அம்சங்கள்
Follow US
2025 Automobile Tamilan - All Rights Reserved
  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms