Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

ரூ.1.61 லட்சத்தில் மஹிந்திரா e-Alfa சூப்பர் 95 கிமீ ரேஞ்சுடன் வெளியானது

by MR.Durai
11 August 2023, 9:13 am
in Auto Industry
0
ShareTweetSend

mahindra e-alfa super launched

மஹிந்திரா லாஸ்ட் மைல் மொபைலிட்டி அறிமுகம் செய்துள்ள புதிய இ-ஆல்ஃபா சூப்பர் மூன்று சக்கர ஆட்டோரிக்‌ஷா விலை ரூ.1.61 லட்சத்தில் வெளியாகியுள்ளது. இ-ரிக்ஷாக்களுக்கான விற்பனை ஆனது மாநில அரசுகளின் ஒப்புதலைப் பொறுத்து கிடைக்கிறது.

இ-ஆல்ஃபா சூப்பர் மாடலில் 140 Ah லெட் ஆசிட் பேட்டரி கொண்டதாக உள்ள ஆட்டோரிக்‌ஷாவின் முந்தைய மாடலை விட 20% ரேஞ்சு ஆனது அதிகமாக  வழங்குவதாக இந்நிறுவனம் கூறுகிறது. மோட்டார் 1.64 kW பவர், 22 Nm டார்க் உருவாக்குகிறது,

Mahindra e-alfa super

தினசரி மற்றும் அதிகப்படியான பயன்பாட்டிற்கு ஏற்றதாக வடிவமைக்கப்பட்டுள்ள இ-ஆல்ஃபா மாடலினை முழுமையாக சார்ஜ் செய்வதனால் 95+ கிமீ வரை வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  D+4 இருக்கை அமைப்பை கொண்டுள்ள மாடலின் வீல்பேஸ் 2168 mm ஆகும்.

மஹிந்திரா தனது வாடிக்கையாளர்களின் பாதுகாப்பு மற்றும் குடும்ப பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் வாகனத்தை வாங்கும் போது ஓட்டுநருக்கு ₹ 10 லட்சம் மதிப்புள்ள விபத்துக் காப்பீட்டையும் முற்றிலும் இலவசமாக வழங்குகிறது.

இ-ஆல்ஃபா ஆட்டோவுக்கு 12 மாத உத்தரவாதத்துடன் வருகின்றது. 18A சார்ஜரை கொண்டதாக வரும் நிலையில் விரைவு சார்ஜ் செய்யும் ஆப்ஷனை வழங்குகிறது; பேட்டரி வாரண்டி 18 மாதங்கள் வழங்கப்படுகின்றது.

Related Motor News

பிஎஸ்-6 மஹிந்திரா ஆல்ஃபா மூன்று சக்கர ஆட்டோ விற்பனைக்கு வந்தது

Tags: Mahindra Alfa
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

suzuki swift Evolution

1 கோடி ஸ்விஃப்ட் கார்களை விற்பனை செய்த சுசுகி

2025 Royal Enfield hunter 350

ராயல் என்ஃபீல்டு பைக்குகளுக்கு 40 % ஜிஎஸ்டி வரி விதிப்பு..!

இ விட்டாரா எலக்ட்ரிக் ஏற்றுமதியை துவங்கிய மாருதி சுசுகி

25 லட்சம் உற்பத்தி இலக்கை கடந்த ஸ்வராஜ் டிராக்டர்ஸ்

41-44 hp சந்தையில் நுழைந்த குபோட்டா MU4201 டிராக்டர் அறிமுகம்

மாருதி சுசூகியின் முதல் எலக்ட்ரிக் e Vitara உற்பத்தி துவங்கியது

இந்தியாவில் 5,000 எலக்ட்ரிக் வாகனங்களை விற்பனை செய்த பிஎம்டபிள்யூ குழுமம்

மீண்டும் பஜாஜ் ஆட்டோவின் சேட்டக் இ-ஸ்கூட்டர் உற்பத்தி சீரானது.!

E20 பெட்ரோலுக்கு எதிரான பொது நல வழக்கு தாக்கல்.!

வரத்தக வாகனங்களை டொமினிக்கன் குடியரசில் வெளியிட்ட டாடா மோட்டார்ஸ்

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan