Skip to content

2025 ஜனவரி முதல் மாருதி சுசூகி கார்களின் விலை 4% வரை உயருகிறது..!

maruti swift

இந்தியாவின் முதன்மையான பயணிகள் வாகன தயாரிப்பாளரான மாருதி சுசூகி நிறுவனம் ஜனவரி 2025 முதல் கார்களின் விலையை அதிகபட்சமாக நான்கு சதவீதம் வரை உயர்த்துவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தொடர்ந்து அதிகரித்து வரும் உற்பத்தி மூலப் பொருட்களின் செலவு மற்றும் செயல்பாட்டிற்கான கட்டண செலவுகள் உள்ளிட்டவையுடன் போக்குவரத்து செலவுகள் என பலவேறு வகைகளில் கட்டணம் உயர்ந்து வருவதனை எதிர்கொள்ளும் வகையில் இந்த விலை உயர்வை தவிர்க்க முடியவில்லை என மாருதி சுசூகி அறிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மாருதி மட்டுமல்ல நாட்டின் பல்வேறு தயாரிப்பாளர்களும் ரூ.25,000 வரை ஹூண்டாய் உயர்த்தியுள்ள நிலையில் பெரும்பாலான ஆட்டோமொபைல் நிறுவனங்கள் விலையை உயர்த்து துவங்கி உள்ளன இந்த பட்டியல் மேலும் அதிகரிக்கும். அடுத்தடுத்து பல நிறுவனங்கள் உயர்த்தும் அறிவிப்பை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.