இந்தியாவில் மிகவும் பிரசத்தி பெற்ற கார்களில் ஒன்றான டால்-பாய் ஹேட்ச்பேக் என அறியப்படுகின்ற வேகன் ஆர் வெற்றிகரமாக கடந்த 26 ஆண்டுகளில் 35 லட்சத்தை கடந்துள்ளது. 1993 ஆம் ஆண்டு முதன்முறையாக வந்த வேகன்ஆரின் ஒட்டுமொத்த உலகளாவிய விற்பனை 1 கோடியை கடந்துள்ளது.
Wagon-R Sales Achivements
டிசம்பர் 1999-ல் அறிமுகமான இந்த கார், தனது உயரமான வடிவமைப்பு (Tall-boy design) மற்றும் தாராளமான இடவசதியால் இந்தியக் குடும்பங்களின் நம்பிக்கையைப் பெற்றது.
- 2010ல் இரண்டாம் தலைமுறை மற்றும் சிஎன்ஜி மாடல் அறிமுகம்.
- 2019ல் தற்போதைய மூன்றாம் தலைமுறை (3rd Gen) மாடல் அறிமுகம்.
- உலகளவில் 1 கோடி விற்பனை எண்ணிக்கையில் இந்தியாவில் 35 லட்சம் உற்பத்தி செய்துள்ளது.
ஜப்பானில், சுஸுகி வேகன் ஆர் முதன்முதலில் செப்டம்பர் 1993ல் செமி-பானட் முறையில் மினி வேகனாக உருவாக்கப்பட்டு வசதியான மற்றும் பயன்படுத்த எளிதான காராக பெரும் புகழ் பெற்ற ஜப்பான், இந்தியா, ஹங்கேரி மற்றும் இந்தோனேசியாவிலும் தயாரிக்கப்படுகிறது.
தற்போது, வேகன் ஆர் ஜப்பான், இந்தியா மற்றும் ஐரோப்பா உட்பட உலகம் முழுவதும் 75க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் விற்கப்படுகிறது. ஆகஸ்ட் 2025ல், சுஸுகி வேகன் ஆர் 1 கோடி யூனிட்களின் விற்பனையை கடந்துள்ளதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
5வது தலைமுறை HEARTECT தளத்தில் கட்டமைக்கப்பட்ட வேகன் ஆரில் 6 ஏர்பேக்குகள், எலக்ட்ரானிக் பிரேக்ஃபோர்ஸ் டிஸ்ட்ரிபியூஷன் உடன் கூடிய ஆன்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம் மற்றும் எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி புரோகிராம் உள்ளிட்ட மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்களும் உள்ளது.
கூடுதலாக, இந்த வேகன் ஆரில் முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் காருக்குள் ஏறுவதையும் இறங்குவதற்கும் ஏற்றதாகவும் சுழலும் இருக்கைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.


