Automobile Tamilan

ஜனவரி 1 முதல் மெர்சிடிஸ்-பென்ஸ் கார்களின் விலை உயருகின்றது..!

Mercedes Benz GLE

வரும் ஜனவரி 2025 முதல் மெர்சிடிஸ்-பென்ஸ் இந்தியா நிறுவனத்தின் கார்களின் விலையை மூன்று சதவீத வரை உயர்த்துவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. குறிப்பாக தற்பொழுது விற்பனை செய்யப்படுகின்ற அனைத்து மாடல்களுக்கும் விலை உயர்வு பொருந்தும் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கூடுதலாக 2024 டிசம்பர் 31ஆம் தேதிக்கு முன்னராக கார்களை முன்பதிவு செய்பவர்களுக்கு இந்த விலை உயர்வு ஆனது பொருந்தாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து அதிகரித்து வருகின்ற மூலப்பொருட்களின் விலை உயர்வு, பண வீக்கம் மற்றும் போக்குவரத்து செலவினங்கள் மற்றும் செயல்பாட்டிற்கான தொகை போன்றவை எல்லாம் அதிகரிப்பதனால் விலை உயர்வை தவிர்க்க முடியவில்லை என மெர்சிடிஸ் பென்ஸ் குறிப்பிடுகின்றது.

Exit mobile version