எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனம், மே 2023-ல் 5,006 எண்ணிக்கையில் விற்பனையைப் பதிவு செய்துள்ளது, இது முந்தைய ஆண்டு இதே மாதத்துடன் ஒப்பீடுகையில் 25% வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. மே 2022-ல் 4,008 எண்ணிக்கை பதிவு செய்துள்ளது.
ஏப்ரல் 2023-ல் 4,551 எண்ணிக்கையில் 10 % வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. இந்நிறுவனம் “வளர்ச்சி மற்றும் பல்வேறு தொடர்ச்சியான மற்றும் திட்டமிடப்பட்ட உற்பத்தி மற்றும் செயல்பாட்டு முயற்சிகள் மூலம் அதிகரித்து வரும் வாடிக்கையாளர் தேவையை பூர்த்தி செய்வதில் நம்பிக்கையுடன் இருப்பதாக” குறிப்பிட்டுள்ளது.
2023 ஆம் நிதியாண்டில் 48,866 எண்ணிக்கையில் விற்று சாதனை படைத்த இந்நிறுவனம், தற்போது ஆஸ்டர், குளோஸ்டர், ஹெக்டர் 5 சீட்டர், ஹெக்டர் பிளஸ் மற்றும் ZS EV, காமெட் EV எஸ்யூவிகளை குஜராத்தின் ஹலோலில் உள்ள தனது ஆலையில் இருந்து ஆகியவற்றை உற்பத்தி செய்து வருகிறது. 80,000 முதல் 100,000 எண்ணிக்கை விற்பனையை இலக்காகக் கொண்டு திட்டமிட்டு வருகின்றது.
எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனம், இந்திய சந்தையில் விற்பனையை அதிகரிக்க முதலீட்டை இந்திய நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றது.