நிசான் இந்தியாவின் பிரசத்தி பெற்ற பி-பிரிவு எஸ்யூவி மேக்னைட் மாடலுக்கு 10 ஆண்டுகள் அல்லது 2,00,000 கிமீ வரை நீட்டிக்கப்பட்ட வாரண்டியை அறிவித்துள்ளது. இதன் மூலம் இந்த பிரிவில் உள்ள போட்டியாளர்களை விட அதிகபட்ச உத்திரவாதம் வழங்குகின்ற மாடலாக மாறியுள்ளது.
அக்டோபர் 2024க்கு பிறகு விற்பனைக்கு வந்த புதிய மேக்னைட் மாடலுக்கு மூன்று வருடம் அல்லது 1,00,000 கிமீ வரை அடிப்படையான உத்தரவாதம் வழங்கப்படுகின்றது. அதன் பிறகு நீட்டிக்கப்பட்ட வாரண்டியை 10 ஆண்டுகள் வரை விரிவுப்படுத்திக் கொள்ளலாம்.
Product Coverage (Extended Warranty)
Nissan Magnite | New Nissan Magnite |
2+1 Yr upto 60000 kms | 3+1 Yr upto 110000 kms |
2+2 Yrs upto 80000 kms | 3+2 Yrs upto 130000 kms |
2+3 Yrs upto 100000 kms | 3+3 Yrs upto 150000 kms |
– | 3+4 Yrs upto 170000 kms |
3+7 Yrs upto 200000 kms |
நீட்டிக்கப்பட்ட உத்தரவாதத்தில் மெக்கானிக்கல் மற்றும் மின் பாகங்களும் அடங்கும். 8வது, 9வது, 10வது ஆகிய வருடங்களுக்கு எஞ்சின் மற்றும் டிரான்ஸ்மிஷன் வாரண்டி மட்டுமே கிடைக்கும் என உறுதிப்படுத்தியுள்ளது.
3 ஆண்டு உற்பத்தியாளர் உத்தரவாதம் காலாவதியானவுடன் நீட்டிக்கப்பட்ட உத்தரவாதம் உடனடியாக நடைமுறைக்கு வரும், மேலும் இது இந்தியாவில் உள்ள அனைத்து நிசான் அங்கீகரிக்கப்பட்ட சேவை மையங்களிலும் செல்லுபடியாகும். இது உரிமைகோரல்களின் எண்ணிக்கை அல்லது மதிப்பில் வரம்பு இல்லாமல் பணமில்லா பழுதுபார்ப்புகளை அனுமதிக்கிறது.