Automobile Tamilan

ஹோண்டா உடன் இணைப்பு முயற்சியை நிசான் கைவிட்டதா..?

நிசான், ஹோண்டா மற்றும் மிட்சுபிஷி

அதிகரித்து வரும் போட்டியை சமாளிக்க நிசான் நிறுவனத்தை ஹோண்டா உடன் இணைத்து உலகின் மிகப்பெரிய ஆட்டோமொபைல் நிறுவனமாக உருவாக இருந்த திட்டத்தை நிசான் ரத்து செய்ய உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

செய்திகள் வெளியானதை தொடர்ந்து டோக்கியோ பங்கு சந்தையில் நிசான் பங்குகள் 4% சரிவை சந்தித்துள்ள நிலையில் ஹோண்டா பங்குகள் விலை 8% வரை உயர்ந்துள்ளது.

கடந்த சில மாதங்களாக பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வந்த ஹோண்டா, நிசான் மற்றும் மிட்சுபிஷி இடையில் நடந்த நிலையில் மிட்சிபிஷி இணைய விரும்பவில்லை என தெரிவித்துள்ளது. இதனை அடுத்த ஹோண்டா நிறுவனம் நிசானை முழுமையாக கையகப்படுத்த திட்டமிட்டிருந்த நிலையில், சமீபத்தில் நடந்த நிசான் கூட்டத்தில் இணைப்பு முயற்சியை கைவிட உள்ளதாக முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ராய்ட்ரஸ் செய்தி முகமை தெரிவித்துள்ளது.

இந்த செய்திக்கு பதிலளித்துள்ள நிசான் நிறுவனம், இறுதி முடிவு நடப்பு பிப்ரவரி மாத மத்தியில் அறிவிக்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளது.

ஹோண்டா நிறுவனம் கூறுகையில், அவ்வாறு  எந்த தகவலும் எங்களுக்கு கிடைக்கவில்லை என தெரிவித்துள்ளது.

Source

Exit mobile version