சுசூகி மோட்டார் கார்ப்பரேஷன் நிறுவனம் வரும் 2021ம் ஆண்டில் குஜராத்தில் புதிய தொழிற்சாலை ஒன்றை உருவாக்க உள்ளதாக அறிவித்துள்ளது. இது இந்த நிறுவனத்தின் இரண்டாவது தொழிற்சாலை என்பது குறிப்பிடத்தக்கது. ஜப்பானிய ஆட்டோதயாரிப்பு நிறுவனமான சுசூகி நிறுவனம் இந்த தொழிற்சாலை கட்ட 9,000 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளது. இந்த தொழிற்சாலை ஹன்சல்பூர் அருகே மேஹசனா என்ற இடத்தில் இருந்து 35 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள விதலபூரில் அமைய உள்ளது.
இந்த தொழிற்சாலை அமைக்க நில கையகப்படுத்தும் பணியில் நிறைவு பெற்று விட்டது. ஹ்ன்சல்புரில் மூன்றாவது அசம்பிளி லைன் நிறைவு பெற்றதும். வரும் 2021ல் இந்த புதிய தொழிற்சாலைக்கான கட்டுமான பணிகள் தொடங்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
அஹமதாபாத்ஹில் இருந்து 60 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள முதல் அசம்பிளி லைனில் 2.5 லட்ச யூனிட்கள் உருவாகப்பட்டு வருகின்றன. இரண்டாவது மற்றும் மூன்றாவது தயாரிப்பு ஆலைகளில் 2.5 யூனிட்கள் தயாரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவை முறையே 2019 மற்றும் 2020ல் உற்பத்தியை தொடங்கும். மூன்று அசம்பளி லைன்கள் மூலம் மொத்தமாக உற்பத்தி திறன் ஆண்டுக்கு 7.5 லட்ச கார்கள் என்ற அளவில் உயர்த்தப்படும்.
ஹன்சலபூர் தொழிற்சாலையில் தற்போது பிரிமியம் ஹாட்ச்பேக் கார்களான மாருதி சுசூகி ஸ்விப்ட் மற்றும் பாலேனோ கார்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையின் மூலம் மொத்தமாக 15 லட்சம் கார்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது.