Automobile Tamilan

குஜராத்தில் டாடா டிகோர் மின்சார கார்கள் உற்பத்தி செய்யப்படும் – டாட்டா மோட்டார்ஸ்

டாட்டா மோட்டார்ஸ் நிறுவனம் 10,000 எலக்ட்ரிக் கார்களை மத்திய அரசுக்கு விற்பனை செய்வதற்கான டாடா டிகோர் மின்சார கார்களை உற்பத்தி செய்வதற்கு குஜராத்தில் அமைந்துள்ள நேனோ ஆலையை பயன்படுத்திக் கொள்ள திட்டமிட்டுள்ளது.

டிகோர் எலக்ட்ரிக் கார்

மத்திய அரசின் ஆற்றல் திறன் சேவைகள் லிமிடெட் நிறுவனத்தின் சார்பில் 10,000 மின்சார கார்களை பெறுவதற்கான ஆர்டரை சமீபத்தில் டாட்டா மோட்டார்ஸ் கைப்பற்றியது குறிப்பிடதக்கதாகும்.

மஹிந்திரா மற்றும் டாடா நிறுவனங்களுக்கு இடையே நிலவிய மிக கடுமையான போட்டியின் முடிவில் டாடா மோட்டார்ஸ் 10,000 கார்களை ரூ.1,120 கோடி மதிப்பீட்டில் கைப்பற்றியுள்ளது.

மஹிந்திரா-வை விட டாடா நிறுவனம் ஒரு காருக்கு ஜிஎஸ்டி வரியில்லாமல் ரூ.10.16 லட்சமாக விலையை நிர்ணயம் செய்திருந்த நிலையில் ஜிஎஸ்டி வரி உட்பட 5 ஆண்டுகளுக்கான வாரண்டியுடன் சேர்த்து ஒரு மின்சார காரை ரூ.11. 20 லட்சம் என்ற விலையில் டாடா கோரியதை தொடர்ந்து 10 ஆயிரம் கார்களுக்கான ஆர்டரை பெற்றுள்ளது.

முதற்கட்டமாக வரும் 2017 நவம்பர் மாதத்தில் 500 மின்சார கார்களும், அடுத்த கட்டமாக 9 ஆயிரத்து 500 கார்களும் சப்ளை செய்யப்பட உள்ளன. இந்நிலையில் பிடிஐ செய்தி பிரிவுக்கு டாடா நிறுவன செய்தி தொடர்பாளர் கூறுகையில் ” மின்சார ஆற்றல் திறனை பெற்ற டிகோர் கார்களை உற்பத்தி செய்வதற்கு குஜராத் மாநிலத்தில் அமைந்துள்ள பிரத்யேக நேனோ கார்களுக்கான சனந்த தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்பட உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இந்த தொழிற்சாலை ஆண்டுக்கு 2.5 லட்சம் வாகனங்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்டதாகும்.

Exit mobile version