ஜிஎஸ்டி 2.0 வரி நடைமுறைக்கு வந்த பின்னர் செப்டம்பர் 2025 மாதந்திர விற்பனையில் முதல் 10 இடங்களை பிடித்த இருசக்கர வாகனங்களில் தொடர்ந்து நாட்டின் முதன்மையான மாடலாக ஹீரோ ஸ்பிளெண்டர்+ விற்பனை எண்ணிக்கை 3,82,283 ஆக பதிவு செய்துள்ளது.
முதல் 10 இடங்களில் ஹீரோ நிறுவனத்தின் இரு மாடல்களும், டிவிஎஸ் நிறுவனத்தின் மூன்று மாடல்களும் இடம்பெற்றுள்ள நிலையில் 10ல் 6 மாடல்கள் பைக், மூன்று மாடல் ஸ்கூட்டர்களாக உள்ளது.
டாப் 10 இருசக்கர வாகன பட்டியல்
| No | Top 10 2Ws | செப்டம்பர் 2025 |
|---|---|---|
| 1 | ஹீரோ Splendor | 3,82,383 |
| 2 | ஹோண்டா Activa | 2,37,716 |
| 3 | ஹோண்டா Shine | 1,85,059 |
| 4 | பஜாஜ் Pulsar | 1,55,798 |
| 5 | டிவிஎஸ் Jupiter | 1,42,116 |
| 6 | ஹீரோ HF Deluxe | 1,18,043 |
| 7 | சுசூகி Access | 72,238 |
| 8 | பஜாஜ் Platina | 62,260 |
| 9 | டிவிஎஸ் XL | 53,748 |
| 10 | டிவிஎஸ் Apache | 53,326 |
குறிப்பாக டாப் 10ல் டிவிஎஸ் மோட்டாரின் ஜூபிடர் ஸ்கூட்டர் அமோக வரவேற்பினை பெற்று முந்தைய செப்டம்பர் 2024 உடன் ஒப்பீடுகையில் சுமார் 39 ஆயிரத்துக்கும் கூடுதலான யூனிட்டுகளை விற்பனை செய்துள்ளது.
அடுத்தப்படியாக நாட்டின் முன்னணி ஸ்கூட்டர் மாடலான ஆக்டிவா தொடர்ந்து சந்தையில் இழப்பை சந்தித்து வருகின்ற நிலையில், முந்தைய செப்டம்பர் 2024யை விட 24,600 யூனிட்டுகள் குறைவாக விற்பனை செய்துள்ளது.

