இந்தியாவில் மிக வேகமாக வளர்ந்து வரும் எலக்ட்ரிக் இரு சக்ககர வாகன விற்பனையில் ஓலா எலக்ட்ரிக் பின்தங்க தொடங்கியுள்ள நிலையில் டிவிஎஸ் மோட்டார், பஜாஜ் சேட்டக் என இரண்டும் சந்தையில் அமோக ஆதரவினை பெற்று வருகின்றது.
குறிப்பாக டிவிஎஸ் மோட்டாரின் ஐக்யூப் ஸ்கூட்டர் விற்பனை எண்ணிக்கை Vahan தரவுகளின் அடிப்படையில் மே 2025ல் சுமார் 24,560 யூனிட்டுகளை டெலிவரி வழங்கி முதலிடத்தில் உள்ளது. இதற்கு அடுத்தப்படியாக பஜாஜ் ஆட்டோவின் சேட்டக் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் எண்ணிக்கை 21,770 ஆக உள்ளது.
கடந்த சில மாதங்களாகவே, ஓலா எலக்ட்ரிக் கடும் சவாலினை சந்தித்து வருகின்றது. குறிப்பாக தொடர்ந்து எழும் சர்வீஸ் தொடர்பான பிரச்சனைகளால் பின்னடைவை சந்தித்த இந்நிறுவனம், மே 2025ல் 18,499 யூனிட்டுகளை டெலிவரி வழங்கியுள்ளது. குறிப்பாக, இந்நிறுவனத்தின் ரோட்ஸ்டெர் இ பைக்குகளும் டெலிவரி துவங்கப்பட்டுள்ளது.
நான்காம் இடத்தில் ஸ்டார்ட்அப் ஏதெர் எனர்ஜி சீரான வளர்ச்சியை தொடர்ச்சியாக பதிவு செய்து வருகின்றது. கடந்த மாதம் சுமார் 12,840 யூனிட்டுகளை டெலிவரி வழங்கியுள்ளது. ஐந்தாம் இடத்தில் இந்தியாவின் முதன்மையான ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் 7,164 விடா மின்சார ஸ்கூட்டர்களை விற்பனை செய்துள்ளது.
ஆறாவது இடத்தில் க்ரீவ்ஸ் கீழ் செயல்படுகின்ற ஆம்பியர் நிறுவனம் 4,177 யூனிட்டுகளை விற்றுள்ளது. மற்ற நிறுவனங்கள் 1000க்கு குறைந்த மாத எண்ணிக்கையை பதிவு செய்து ஒட்டுமொத்தமாக மே 2025 மாதந்திர விற்பனையில் சுமார் 1,00,206 மின்சார டூ வீலர்கள் Vahan தளத்தின் மூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
TOP 5 E-2Ws | units |
TVS iQube | 24,560 |
Bajaj Chetak | 21,770 |
Ola Electric | 18,499 |
Ather Energy | 12,840 |
Hero Vida | 7,164 |