ஏப்ரல்-ஜூன் 2025 வரையிலான முதல் காலாண்டில் 9% சந்தை மதிப்பை ஹோண்டா ஸ்கூட்டர் சந்தையில் இழந்துள்ள நிலையில், டிவிஎஸ் மோட்டார் 6% சந்தை மதிப்பை கைப்பற்றியுள்ளது. மற்ற நிறுவனங்களான சுசூகி, பஜாஜ் ஆட்டோ போன்ற நிறுவனங்களின் சந்தை மதிப்பு தலா 1% வரை அதிகரித்துள்ளது.
நாட்டின் முதன்மையான ஸ்கூட்டர் விற்பனையாளரான ஹோண்டா 2026 நிதியாண்டின் முதல் காலாண்டில் 642,106 யூனிட்களை விற்றுள்ளது. கடந்த 2025 நிதியாண்டின் முதல் காலாண்டுடின் முடிவில் 794,835 யூனிட்கள் பதிவு செய்திருந்தது. இதன் மூலம் முந்தைய ஆண்டின் காலாண்டுடன் ஒப்பீடுகையில் 19 % வீழ்ச்சி அடைந்துள்ளது.
குறிப்பாக, டிவிஎஸ் மோட்டாரின் வளர்ச்சிக்கு பின்னால் ஜூபிட்டர் மட்டுமல்லாமல் ஐக்யூப் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் என்டார்க் போன்றவை முக்கிய பங்கு வகிக்கின்றது. இதுதவிர இந்நிறுவனத்தின் குறைந்த விலை ஸ்கூட்டி ஜெஸ்ட் 110 உள்ளது. குறிப்பாக, 2026 நிதியாண்டின் முதல் காலாண்டில் 4,76,196 யூனிட்களை விற்பனை செய்து முந்தைய 2025 நிதியாண்டின் முதல் காலாண்டில் விற்பனை செய்யப்பட்ட எண்ணிக்கை 3,86,633 ஆக உள்ளதால் 23 % கூடுதல் வளர்ச்சி அடைந்துள்ளது.
ICE ரக ஸ்கூட்டரின் எண்ணிக்கை 4,06,706 யூனிட்டுகளாகவும், ஐக்யூப் எண்ணிக்கை 69,490 ஆக உள்ளது.
மூன்றாவது பெரிய ஸ்கூட்டர் தயாரிப்பாளராக உள்ள சுசூகி நிறுவனம் 11% வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. குறிப்பாக நாட்டின் 125சிசி ஸ்கூட்டர் சந்தையில் முதன்மையான நிறுவனமாக உள்ளது. 2026 நிதியாண்டின் முதல் காலாண்டில் 2,72,682 யூனிட்களை விற்பனை செய்து முந்தைய 2025 நிதியாண்டின் முதல் காலாண்டில் விற்பனை செய்யப்பட்ட எண்ணிக்கை 2,46,264 ஆக உள்ளதால் 11 % கூடுதல் வளர்ச்சி அடைந்துள்ளது.
நான்காவது பெரிய ஸ்கூட்டர் தயாரிப்பாளராக நாட்டின் முதன்மையான இரு சக்கர வாகன தயாரிப்பாளரான ஹீரோ மோட்டோகார்ப் 5 % சந்தை பங்களிப்புடன் 2026 நிதியாண்டின் முதல் காலாண்டில் 89,286 யூனிட்களை விற்பனை செய்து முந்தைய 2025 நிதியாண்டின் முதல் காலாண்டில் விற்பனை செய்யப்பட்ட எண்ணிக்கை 85,389 ஆக உள்ளதால் 5 % கூடுதல் வளர்ச்சி அடைந்துள்ளது.
இதில் இந்நிறுவனத்தின் விடா வி2 ஸ்கூட்டரின் எண்ணிக்கை 22,655 ஆக உள்ளது.
ஸ்கூட்டர் சந்தையில் மிகப்பெரிய சரிவை சந்தித்த நிறுவனங்களில் ஒன்று யமஹா 16 % சரிவடைந்துள்ளது. 2026 நிதியாண்டின் முதல் காலாண்டில் 63,521 யூனிட்களை விற்பனை செய்து முந்தைய 2025 நிதியாண்டின் முதல் காலாண்டில் விற்பனை செய்யப்பட்ட எண்ணிக்கை 75,601 ஆகும்.
அடுத்து, பஜாஜ் ஆட்டோவின் சேட்டக் எலக்ட்ரிக் மூலம் 63,620 யூனிட்டுகளை விற்பனை செய்து முந்தைய ஆண்டுடன் ஓப்பீடுகையில் 45 % வளர்ச்சி பெற்றுள்ளது. அடுத்து மிக முக்கிய நிறுவனம் ஏதெர் எனர்ஜி 97% வளர்ச்சி அடைந்து 46,907 யூனிட்டுகளை விற்றுள்ளது.
தயாரிப்பாளர் | Q1 FY2026 Apr-Jun 2025 |
Q1 FY2025 Apr-Jun 2024 |
YoY Change |
---|---|---|---|
ஹோண்டா | 6,42,106 | 7,94,835 | -19% |
டிவிஎஸ் | 4,76,196 | 3,86,633 | 23% |
சுசூகி | 2,72,682 | 2,46,264 | 11% |
ஹீரோ | 89,286 | 85,389 | 5% |
பஜாஜ் சேட்டக் | 63,620 | 43,854 | 45% |
யமஹா | 63,521 | 75,607 | -16% |
ஏதெர் | 46,907 | 23,816 | 97% |
பியாஜியோ | 7,401 | 8,504 | -13% |
ஓகினாவா | 33 | 92 | -64% |
Total | 16,61,752 | 16,64,994 | 0% |
உதவி – SIAM Data