Automobile Tamilan

நார்டன் எலெக்ட்ரா, காம்பேட் அறிமுகம் எப்பொழுது.?

5dafd norton commando 961

ராயல் என்ஃபீல்டுக்கு போட்டியாக மற்றொரு நிறுவனமாக நார்டன் மோட்டார்சைக்கிள் பிராண்டின் கீழ் பைக்குகளை அறிமுகம் செய்ய டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் திட்டமிட்டு இருக்கின்றது. கடந்த 2020 ஆம் ஆண்டு டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் இங்கிலாந்தின் நார்டன் நிறுவனத்தை வாங்கியிருந்த நிலையில் தற்போது பல்வேறு புதிய பிராண்ட் பெயர்களாக காம்பேட், எலக்ட்ரா ஆகியவற்றை பதிவு செய்துள்ளது.

அதே வேளையில் ஏற்கனவே உறுதிப்படுத்தப்பட்ட தகவலின் படி ஆறு மோட்டார் சைக்கிள்களை அடுத்தடுத்து மூன்று ஆண்டுகளுக்குள் கொண்டுவர திட்டமிட்டு இருப்பதாக குறிப்பிட்டுள்ளது. அனேகமாக இந்நிறுவனம் கொண்டு வர உள்ள மாடல்கள் ராயல் என்ஃபீல்டு 350சிசி முதல் அதற்கு மேற்பட்ட உள்ள பல்வேறு மோட்டார் சைக்கிள்களை எதிர்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

2027 ஆம் ஆண்டின் இறுதிக்குள் 6 நார்டன் மோட்டார்சைக்கிள்களை இந்தியா உட்பட பல்வேறு நாடுகளுக்கு விற்பனைக்கு வெளியிட உள்ளதாக உறுதி செய்துள்ளது. முதற்கட்டமாக வரவுள்ள மாடல் நடப்பு 2025 ஆம் ஆண்டின் இறுதி அல்லது 2026 ஆம் ஆண்டின் துவக்க மாதங்களில் சந்தைக்கு வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Exit mobile version