Automobile Tamilan

2024 ஆம் ஆண்டின் முதல் மாதம் அதிக பேர் வாங்கிய டாப் 10 இருசக்கர வாகனங்கள்

2024 ஆம்  ஆண்டின் ஜனவரி துவக்க மாதத்தில் அதிகப்படியான இந்தியர்கள் தேர்ந்தெடுத்த டாப் 10 இருசக்கர வாகனங்களில் ஹீரோ ஸ்பிளெண்டர் (Hero Splendor) முதலிடத்தில் 2,55,162 பைக்குகளை விற்பனை செய்துள்ள நிலையில் கடந்த ஆண்டு இதே மாதத்துடன் ஒப்பீடுகையில் விற்பனை 2.56 % வீழ்ச்சி அடைந்துள்ளது.

pulsar 125 bike

அடுத்த இடத்தில் உள்ள ஹோண்டா ஆக்டிவா 2023 ஜனவரி மாதத்தை விட 33.66 % வளர்ச்சி அடைந்து 1,73,760 வாகனங்கள் விற்பனை ஆகியுள்ளது.ஹோண்டா ஷைன் விற்பனை எண்ணிக்கை 1,45,252 ஆகவும் இதுதவிர, பஜாஜ் பல்சர் நான்காவது இடத்தில் 1,28,883 யூனிட்டுகளும் விற்பனை செய்யப்பட்டுள்ளது. பல்சரின் வளர்ச்சி 52.92 % வளர்ச்சி அடைந்துள்ளது.

முதல் 10 இடங்களில் டிவிஎஸ் நிறுவனத்தின் மூன்று மாடல்களும், ஹோண்டா, பஜாஜ் ஆட்டோ மற்றும் ஹீரோ மோட்டோகார்ப் தலா 2 இடங்களை பகிர்ந்து கொள்ளுகின்றன. சுசூகி நிறுவன ஆக்செஸ் பட்டியலில் 7வது இடத்தில் 55,386 ஸ்கூட்டர்களை விற்பனை செய்துள்ளது.

அட்டவனையில் ஜனவரி 2024 டாப் 10 விற்பனை நிலவரம் பின்வருமாறு;-

டாப் 10 இருசக்கர வாகனம் ஜனவரி  2024 ஜனவரி 2023
1. ஹீரோ ஸ்பிளெண்டர் 2,55,122 2,61,833
2. ஹோண்டா ஆக்டிவா 1,73,760 1,30,001
3. ஹோண்டா ஷைன் 1,45,252 99,878
4. பஜாஜ் பல்சர் 1,28,883 84,279
5. ஹீரோ HF டீலக்ஸ் 78,764 47,840
6. டிவிஎஸ் ஜூபிடர் 74,225 54,484
7. சுசூகி ஆக்செஸ் 55,386 45,497
8. டிவிஎஸ் ரைடர் 43,331 27,233
9. டிவிஎஸ் XL 42,036 36,723
10. பஜாஜ் பிளாட்டினா 33,103 41,873

முதல் 10 இடங்களில் மூன்று ஸ்கூட்டர்கள், 6 பைக்குகள் மற்றும் ஒரு மொபெட் டிவிஎஸ் XL100 மாடல் 42,036 ஆக பதிவு செய்து முந்தைய ஆண்டின் இதே மாதத்துடன் ஒப்பீடுகையில் 14.47 % வளர்ச்சி பெற்றுள்ளது. 125சிசி வரிசையில் உள்ள டிவிஎஸ் ரைடர் பைக் 43,331 எண்ணிக்கையை பதிவு செய்துள்ளது.  இறுதி இடத்தில் பஜாஜ் பிளாட்டினா உள்ளது.

Exit mobile version