தென்தமிழ்நாட்டின் முதல் மின்சார வாகனங்கள் தயாரிப்பு தொழிற்சாலையை தமிழ்நாட்டின் முதலமைச்சர் திரு. மு.க ஸ்டாலின் அவர்களால் உற்பத்தி பிரிவு துவக்கி வைக்கப்பட்டுள்ள நிலையில் விரைவில் VF7, VF6 மின்சார கார்களின் இந்நிறுவனம் விநியோகத்தை துவங்க உள்ளது.
வியட்நாமை சேர்ந்த வின்ஃபாஸ்ட் இந்தியாவில் சுமார் ரூ.16,000 கோடி முதலீட்டில் ஆண்டுக்கு 1.50 லட்சம் வாகனங்களை தயாரிக்கும் தொழிற்சாலையை தூத்துக்குடியில் துவங்கி உள்ள நிலையில், முதல் உற்பத்தி பிரிவில் கார்கள் ஒருங்கினைக்கப்பட்டுள்ளது.
துவக்க விழாவில் முதல்வர் பேசிய விபரம் பின் வருமாறு,
இந்தியாவோட மின் வாகன உற்பத்தியில 40 விழுக்காடு தமிழ்நாட்டிலிருந்து தான் உற்பத்தி ஆகுது தமிழ்நாடு வாகன உற்பத்தி மற்றும் மின்வாகன உற்பத்தினுடைய தலைநகரம் நெஞ்சு நிமிர்த்தி நான் சொல்வேன்., திரும்பெரும்புதூர்ல எப்படி முதல் கார் உற்பத்தி திட்டம் தொடங்கப்பட்டுச்சோ அதே மாதிரி இன்னைக்கு தூத்துக்குடியில முதல் மின்வாகன உற்பத்தி திட்டம் தொடங்கப்பட்டது இதன் மூலம் தமிழ்நாட்டுக்கு வியட்நாமுக்கும் இடையேயான வர்த்தக மற்றும் பொருளாதார வளர்ச்சி மேம்படும்.
கடந்த 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடந்த உலக முதலீட்டாளர் மாநாட்டின் போது 16,000 கோடி ரூபாய் உறுதி அளிக்கப்பட்ட முதலீடு மற்றும் 3500 நபர்களுக்கு உறுதி அளிக்கப்பட்ட வேலைவாய்ப்பு அந்த வகையில இந்த உற்பத்தி திட்டத்துக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் நடைபெற்றது.
இன்னைக்கு தொடக்க விழா நடக்குது 17 மாசத்துல இந்த நிறுவனம் உற்பத்தி தொடங்கி இருக்கு இதனால தூத்துக்குடி மட்டுமல்ல தமிழ்நாட்டினுடைய தென் மாவட்டங்கள் மிகப்பெரிய தொழில் பகுதியா வளர்ச்சி அடையும். அதனால உறுதியோடு சொல்றேன். இந்நாள் தென்மாவட்டங்களுடைய ஒரு பொன்னால் என முதலமைச்சர் திரு. மு.க ஸ்டாலின் குறிப்பிட்டார்.