Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

தூத்துக்குடியில் வின்ஃபாஸ்ட் எலக்ட்ரிக் பஸ் மற்றும் ஸ்கூட்டர் தயாரிக்க ஒப்பந்தம்.!

by நிவின் கார்த்தி
4 December 2025, 7:30 pm
in Auto Industry
0
ShareTweetSend

vinfast electric india plan new

தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் ஏற்கனவே வின்ஃபாஸ்ட் கார்கள் தயாரிக்கப்பட்டு வரும் நிலையில் கூடுதலாக மின்சார பேருந்து மற்றும் ஸ்கூட்டர் தயாரிப்பதற்கு தமிழ்நாடு அரசுடன் ஒரு புதிய புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU) கையெழுத்திட்டுள்ளது.

இந்த ஒப்பந்தத்தின்படி, தூத்துக்குடி சிப்காட் தொழிற்பூங்காவில், ஏற்கனவே உள்ள வின்ஃபாஸ்ட் ஆலைக்கு அருகாமையில் கூடுதலாக 500 ஏக்கர் நிலத்தை அரசு ஒதுக்கீடு செய்யவுள்ளது. எலக்ட்ரிக் கார்களில் கவனம் செலுத்தி வந்த வின்ஃபாஸ்ட், இந்த புதிய ஆலையில் எலக்ட்ரிக் பேருந்துகள் மற்றும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை தயாரிக்கவும், இதற்காக பிரத்யேக தயாரிப்பு கூடங்கள் மற்றும் சோதனை மையங்கள் அமைக்கவும் உள்ளது.

வின்ஃபாஸ்டின் ஒட்டுமொத்த 2 பில்லியன் டாலர் (ரூ.16,000 கோடி) முதலீட்டுத் திட்டத்தின் இரண்டாம் கட்டமாக, சுமார் ஏறக்குறைய ₹4,200 கோடி) முதலீடு செய்யவுள்ளது.

தமிழ்நாடு அரசு இந்தத் திட்டத்திற்குத் தேவையான மின்சாரம், தண்ணீர், சாலை வசதிகள் மற்றும் கழிவு மேலாண்மை போன்ற உள்கட்டமைப்புகளை ஏற்படுத்தித் தரவும், மாநிலக் கொள்கைகளின்படித் தேவையான மானியங்கள் மற்றும் சலுகைகளையும் வழங்கும் என்று உறுதியளிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் திரு. டி.ஆர்.பி ராஜா அவர்கள் பேசுகையில், “வின்ஃபாஸ்ட் நிறுவனத்தின் இந்த புதிய எலக்ட்ரிக் பஸ் மற்றும் ஸ்கூட்டர் தயாரிப்புத் திட்டம், இந்தியாவின் பசுமைப் போக்குவரத்து கொள்கைக்கு மிகப்பெரும் உந்துசக்தியாக இருக்கும்” என்று பாராட்டியுள்ளார்.

Related Motor News

2026ல் எலக்ட்ரிக் ஸ்கூட்டர், பஸ் என வின்ஃபாஸ்டின் அறிமுக திட்டங்கள்.!

வின்ஃபாஸ்ட் VF6 எலக்ட்ரிக் காரின் சிறப்புகள் மற்றும் ஆன்-ரோடு விலை

ரூ.20.89 லட்சத்தில் வின்ஃபாஸ்ட் VF7 எலக்ட்ரிக் கார் வெளியானது

ரூ.16.49 லட்சத்தில் வின்ஃபாஸ்ட் VF6 விற்பனைக்கு வெளியானது

தூத்துக்குடியில் வின்ஃபாஸ்ட் மின்சார கார் உற்பத்தி துவங்கியது

ஜூலை 15., வின்ஃபாஸ்ட் VF6, VF7 முன்பதிவு துவங்குகின்றது

Tags: VinfastVinfast Bus
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

Tata Sierra suv

நவம்பர் 2025 விற்பனையில் இந்தியாவின் டாப் 10 கார் நிறுவனங்கள்.!

bmw f 450 gs production begins

ஓசூரில் துவங்கிய பிஎம்டபிள்யூ F 450 GS உற்பத்தி விற்பனைக்கு எப்பொழுது.?

20 நிமிடங்களில் மின்சார வாகனங்ளுக்கு மஹிந்திராவின் Charge_IN துவக்கம்.!

11,529 ஹைரைடர் கார்களை திரும்ப அழைக்கும் டொயோட்டா

கேடிஎம் 125, 250 மற்றும் 390 டியூக் பைக்குகளை திரும்ப அழைப்பு.!

கேடிஎம் நிறுவனத்தை கையகப்படுத்திய பஜாஜ் ஆட்டோ

39,506 கிராண்ட் விட்டாரா கார்களை திரும்ப அழைக்கும் மாருதி சுசூகி

இந்தியாவின் முதன்மையான ஸ்கூட்டர் 3.5 கோடி இலக்கை கடந்தது.!

செப்டம்பர் 2025ல் இந்தியாவின் டாப் 10 இருசக்கர வாகனங்கள்

எம்பிவி, EV, ஜெனிசிஸ் பிராண்டு அறிமுகத்தை உறுதி செய்த ஹூண்டாய் இந்தியா

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan