மஹிந்திரா KUV100 நெக்ஸ்ட் விற்பனைக்கு வெளியானது

மஹிந்திரா நிறுவனத்தின் மஹிந்திரா கே.யூ.வி100 நெக்ஸ்ட் எஸ்யூவி ரூ.4.43 லட்சம் ஆரம்ப விலையில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது.

இந்திய சந்தையின் முன்னணி யுட்டிலிட்டி தயாரிப்பாளரான மஹிந்திரா நிறுவனத்தின் மஹிந்திரா கே.யூ.வி100 நெக்ஸ்ட் எஸ்யூவி ரூ.4.43 லட்சம் ஆரம்ப விலையில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது.

மஹிந்திரா கே.யூ.வி100 நெக்ஸ்ட்

 

ads

முந்தைய மாடலை விட தோற்ற அமைப்பு மற்றும் கூடுதல் வசதிகள் உள்பட எஞ்சின் மைலேஜ் மற்றும் என்விஎச் ஆகிய அம்சங்களை பெற்றதாக விற்பனைக்கு வந்துள்ளது.

தோற்ற அமைப்பில் முகப்பில் புதுப்பிக்கப்பட்ட கிரில் மற்றும் புதிய பம்பரை பெற்றதாக ஸ்கிட் பிளேட் மற்றும் புதிய 15 அங்குல டைமன்ட் கட் அலாய் வீல், வீல் ஆர்ச், எல்இடி டெயில் விளக்குகள் ஆகியவற்றை பெற்றிருக்கின்றது. விற்பனையில் உள்ள மாடல் 3675 மிமீ பெற்றிருந்த நிலையில் தற்போது நீளம் 3,700 மிமீ ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

நிறங்களில் மொத்தம் 6 வகையான வண்ணங்களுடன் கூடுதலாக 3 வகையில் இருவிதமான வண்ண கலவை பெற்றதாக வந்துள்ளது.

இன்டிரியரில் சில மேம்பாடுகளுடன் டாப் வேரியன்ட் மாடலில் புதிய 7.0 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்துடன் ஜிபிஎஸ் நேவிகேஷன் வசதிக்காக மேப் மை இந்தியா ஆதரவினை பெற்றதாக இடம் பெற்றுள்ளது. முன்பு 5 மற்றும் 6 இருக்கை தேர்வுகளில் கிடைத்து வந்த கேயுவி100, இனி 6 இருக்கை ஆப்ஷன் அடிப்படையாகவும், 5 இருக்கை தேர்வு ஆர்டரின் அடிப்படையில் வழங்கப்பட உள்ளது.

 

எஞ்சின்

82 bhp at 5500 ஆர்பிஎம் யில் வழங்கும் 1198cc எம் ஃபால்கன் G80 பெட்ரோல் என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் டார்க் 115 Nm 3500 முதல் 3600 ஆர்பிஎம் ஆகும். இதில் 5 வேக கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.

77 bhp at 3750 ஆர்பிஎம் யில் வழங்கும் 1198cc எம் ஃபால்கன் D75 டீசல் என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் டார்க் 190 Nm 1750 முதல் 2250 ஆர்பிஎம் ஆகும். இதில் 5 வேக கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. டீசல் KUV100  எஸ்யூவி காரில் பவர் மற்றும் இக்கோ மோட் உள்ளது.

KUV100 NXT எஸ்யூவி விலை பட்டியல்
Variant பெட்ரோல் விலை டீசல் விலை
K2  ரூ.4.43 லட்சம் ரூ.5.43 லட்சம்
K2+ ரூ. 4.82 லட்சம் ரூ. 5.67 லட்சம்
K4+ ரூ. 5.27 லட்சம் ரூ. 6.15 லட்சம்
K6+ ரூ. 6.08 லட்சம் ரூ. 6.99 லட்சம்
K8 ரூ. 6.44 லட்சம் ரூ. 7.36 லட்சம்
K8 டூயல் டோன் ரூ. 6.51 லட்சம் ரூ. 7.44 லட்சம்

(சென்னை எக்ஸ்-ஷோரூம் விலை)

 

Comments