விரைவில் மஹிந்திரா TUV300 பிளஸ் விற்பனைக்கு அறிமுகம்

இந்தியாவின் முன்னணி யுட்டிலிட்டி ரக வாகன தயாரிப்பாளராக விளங்கும் மஹிந்திரா நிறுவனத்தின் டியூவி 300 எஸ்யூவி மாடலை அடிப்படையாக கொண்ட மஹிந்திரா TUV300 பிளஸ் விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது.

மஹிந்திரா TUV300 பிளஸ்

விற்பனையில் உள்ள டியூவி300 எஸ்யூவி காரின் பின்னணியாக கொண்டு கூடுதல் வீல்பேஸ் பெற்றதாக வரவுள்ள இந்த மாடல் சைலோ எம்பிவி காருக்கு மாற்றாக மிகவும் சவாலான விலையில் பல்வேறு வசதிகளுடன், தாராளமான இடவசதி கொண்டதாக இருக்கும்.

ads

டியூவி 300 காரில் பெற்றுள்ள 1.5 லிட்டர் எஞ்சின் அதிகபட்சமாக 100ஹெச்பி ஆற்றலுடன் 240 என்எம் டார்க் வழங்கி வரும் நிலையில், புதிதாக வரவுள்ள டியூவி300 பிளஸ் காரில் m-Hawk D120 என்ற பேட்ஜ் இடம்பெற்றுள்ளதால், இதில் 1.99 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 120ஹெச்பி ஆற்றலுடன் 2480 என்எம் டார்க் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதில் 5 வேக மேனுவல் தவிர ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷனிலும் கிடைக்கப்பெறலாம்.

தோற்ற அமைப்பில் பெரிய அளவில் மாற்றங்கள் இல்லாமல், பின்புறத்தில் மட்டும் வீல் பேஸ் அதிகரிக்கப்பட்டு டெயில்விளக்கு புதிதாக இணைக்கப்பட்டு அதிகபட்சமாக 9 இருக்கைகள் கொண்ட காராக டியூவி 300 பிளஸ் விளங்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றது.

2009 ஆம் ஆண்டு முதல் விற்பனையில் உள்ள மஹிந்திரா சைலோ எம்பிவி மாடலுக்கு மாற்றாக அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதுதவிர இந்நிறுவனம் இன்னோவா க்ரீஸ்டா,ஹெக்ஸா மாடல்களை எதிர்கொள்ள U321 எம்பிவி மாடலை அடுத்த ஆண்டின் மத்தியில் விற்பனைக்கு வெளியிட உள்ளது.

images – autocarindia

Comments