மாருதி பலேனோ ஆர்எஸ் விற்பனைக்கு வந்தது

கூடுதல் பவர், கூடுதல் செயல்திறனை வெளிப்படுக்கூடிய பவர்ஃபுல்லான மாருதி பலேனோ ஆர்எஸ் கார் ரூ.8.69 லட்சம் விலையில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. மாருதியின் பூஸ்டர்ஜெட் என்ஜின் 101 பிஹெச்பி பவரை வெளிப்படுத்துகின்றது.

 

மாருதி பலேனோ ஆர்எஸ்

ads

ஆர்எஸ் என்றால் ரோட் ஸபோர்ட் என்பது விளக்கமாகும். நெக்ஸா வழியாக விற்பனை செய்யப்பட்ட உள்ள பலேனோ ஆர்எஸ் காரில் பல்வேறு பிரிமியம் ஆப்ஷன்கள் இடம்பெற்றுள்ளது.  அடிப்படையான பாதுகாப்பு அம்சங்களாக டூயல் ஏர்பேக் , ஏபிஎஸ் மற்றும் இபிடி போன்றவற்றை கொண்டுள்ளது.

பலேனோ ஆர்எஸ் பூஸ்டர்ஜெட் என்ஜின்

என்ஜின்  (cc) 998
அதிகபட்ச பவர் ([email protected]) 100.5/5500
அதிகபட்ச டார்க் ([email protected]) 150/1700-4500
எரிபொருள் பலன் (l) 37
எரிபொருள்வகை பெட்ரோல்
கேம்ஷாஃப்ட் DOHC
சிலிண்டர் எண்ணிக்கை 3

சாதரன பலேனோ ஆர்எஸ் காரை விட தோற்ற அமைப்பில் முன்பக்க பம்பரில் புதிய கிரில் , பின்பக்கத்தில் புதிய கிரில் போன்றவற்றுடன் பக்கவாட்டில் புதிய அலாய் வீல் இடம்பெற்றுள்ளது. முன்பக்கத்தில் 14 அங்குல அலாய் வீல் பின்பக்கத்தில் 13 அங்குல வீல் இடம்பெற்றுள்ளது. சிவப்பு, வெள்ளை, நீலம், ரே நீலம், சில்வர், ஆரஞ்சு  மற்றும் கிரே என மொத்தம் 7 வண்ணங்களில் கிடைக்க உள்ளது.

முழுமையாக படிக்க ♥ பலேனோ ஆர்எஸ் பற்றி அறிந்து கொள்ள

பலேனோ ஆர்எஸ் படங்கள்

[foogallery id=”16935″]

Comments