மாருதியின் எர்டிகா லிமிடேட் எடிசன் அறிமுகம்

கடந்த 2012 ம் ஆண்டு முதல் விற்பனையில் உள்ள மாருதியின் எர்டிகா எம்பிவி காரில் கூடுதல் வசதிகளை கொண்ட வரையறுக்கப்பட்ட பதிப்பு ரூபாய் 7.85 லட்சம் விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.  எர்டிகா காரின் VXi மற்றும் VDi வேரியன்டில் மட்டுமே கிடைக்கும்.

மாருதி எர்டிகா

7 இருக்கைகளை கொண்ட எர்டிகா மாடலின் சிறப்பு பதிப்பில் பல்வேறு துனைகருவிகள் கூடுதலாக இணைக்கப்பட்டுள்ளது. சிறப்பு பதிப்பு மாடலுக்கு புதிதாக மெரூன் வண்ணம் சேர்க்கப்பட்டு கூடுதலாக வெள்ளை , சிலவர் என மொத்தம் 3 வண்ணங்களில் கிடைக்க உள்ளது.

ads

புதிய பொலிவினை பெற்ற அலாய் வீல்கள், பனி விளக்குகளை சுற்றி க்ரோம் பட்டை , பக்கவாட்டில் க்ரோம் மோல்டிங் , லிமிடேட் எடிசன் சிறப்பு பேட்ஜ் போன்றவற்றுடன் உட்புறத்தில் கருப்பு சார்ந்த வண்ணத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு பிரிமியம் இருக்கை கவர்கள் ,  மரவேலைப்பாடு மிக்க டேஸ்போர்டு , ஆம்பியன்ட் லைட்டுகள் ,  இரட்டை வண்ண ஸ்டீயரிங் வீல் உறை மற்றும் தலையனை போன்றவை சேர்க்கப்பட்டுள்ளது.

பெட்ரோல் மற்றும் டீசல் எஞ்சின் பவர், டார்க் போன்றவற்றில் மாற்றங்கள் இல்லாமல் தொடர்கின்றது. 91 .15 hp பவரையும் , 130 Nm டார்க்கையும் வெளிப்படுத்தும் 1.4 லிட்டர் கே வரிசை பெட்ரோல் எஞ்சின் மற்றும்  88.47 hp பவரையும் , 130 Nm டார்க்கையும் வெளிப்படுத்தும் 1.3 லிட்டர் DDiS டீசல் எஞ்சினும் இடம்பெற்றுள்ளது. இரு எஞ்சினிலும் சக்கரங்களுக்கு பவரை எடுத்து செல்ல 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.

மாருதி எர்டிகா லிமிடேட் எடிசன் விலை விபரம்

  • VXi Limited Edition – ரூ.7.85 லட்சம்
  • VDi Limited Edition – ரூ.8.10 லட்சம்

( விலை விபரம் டெல்லி எக்ஸ்ஷோரூம் )

எர்டிகா லிமிடேட் எடிசன் 9 படங்கள் இணைப்பு (படங்களை பெரிதாக காண படத்தை க்ளிக் பன்னுங்க)

 

Comments