சுஸூகி ஸ்விஃப்ட் ஸ்போர்ட் கார் அறிமுகம்

வருகின்ற செப்டம்பர் 14, 2017 முதல் செப்டம்பர் 24, 2017 வரை நடைபெற உள்ள 67வது  பிராங்ஃபர்ட் மோட்டார் ஷோ அரங்கில் காட்சிப்படுத்தப்பட உள்ள சுஸூகி ஸ்விஃப்ட் ஸ்போர்ட் காரின் முதல் செட் படங்களை சுஸூகி வெளியிட்டுள்ளது.

சுஸூகி ஸ்விஃப்ட் ஸ்போர்ட்

சர்வதேச அளவில் முந்தைய வருடத்தின் இறுதியில் ஜப்பான் உள்ளிட்ட ஐரோப்பா நாடுகளில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ள ஸ்விஃப்ட் காரின் பின்னணியாக உருவாக்கப்பட்டுள்ள ஸ்போர்ட்டிவ் வெர்ஷன் மாடலாக ஸ்விப்ட் ஸ்போர்ட் வெளியிடப்பட்டுள்ளது.

2005 முதல் பல்வேறு நாடுகளில் விற்பனை செய்யப்பட்டு வருகின்ற ஸ்விஃப்ட் ஸ்போர்ட் காரின் மேம்படுத்தப்பட்ட புதிய தலைமுறை மாடலை அடிப்படையாக கொண்டதாக வெளியிடப்பட்டுள்ளது.

முந்தைய 1.6 லிட்டர் பெட்ரோல் எஞ்சினுக்கு மாற்றாக அதிகபட்சமாக 140hp பவரை வெளிப்படுத்தும் 1.4 லிட்டர் டர்போசார்ஜ்டூ பெட்ரோல் எஞ்சின் 220 Nm டார்க் வழங்குவதுடன் சக்கரங்களுக்கு ஆற்றலை எடுத்துச் செல்ல 6 வேக மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இடம்பெற்றிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

முன்புற தோற்ற அமைப்பில் மிகவும் ஸ்டைலிஷான் ஏர்டேம் மற்றும் கூர்மையான தோற்றத்தை வெளிப்படுத்தும் தன்மை கொண்டதாக உள்ளது. மிகவும் நேர்த்தியாக டைமன்ட் கட் அம்சத்தை பெற்ற அலாய் வீல் பின்புறத்தில் கருப்பு பூச்சினை பெற்ற பம்பர் மற்றும் டிஃப்யூஸரை கொண்டதாக விளங்குகின்றது. உட்புறத்தில் இரட்டை வண்ண கலவையுடன் ஸ்போர்ட்டிவ் தன்மையை வெளிப்படுத்தும் வகையிலான அமைப்பினை கொண்டதாக விளங்குகின்றது.

வரும் செப்டம்பர் 12, 2017-ல் பிராங்ஃபர்ட் மோட்டார் ஷோ அரங்கில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. சர்வதேச அளவில் இந்த ஆண்டின் இறுதியில் வெளியிடப்பட உள்ள ஸ்போர்ட்டிவ் ஸ்விஃப்ட் அடுத்த ஆண்டில் நடைபெற உள்ள 2018 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ வாயிலாக இந்திய சந்தைக்கு வரவுள்ள  மாருதி ஸ்விஃப்ட் கார் அதனை தொடர்ந்து ஸ்போர்ட்டிவ் மாடல் அடுத்த ஆண்டின் இறுதியில் கிடைக்க உள்ளது.

Recommended For You