பகானி ஹூவைரா ரோட்ஸ்டெர் அறிமுகம் – 2017 ஜெனிவா மோட்டார் ஷோ

மிகவும் சக்திவாய்ந்த புதிய பகானி ஹூவைரா ரோட்ஸ்டெர் கார் மாடலை 87வது ஜெனிவா மோட்டார் வாகன கண்காட்சி அரங்கில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. 764 hp பவரை வெளிப்படுத்தக்கூடிய 6.0 லிட்டர் ட்வீன் டர்போசார்ஜ்டூ AMG M158 எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது.

பகானி ஹூவைரா ரோட்ஸ்டெர்

100 பகானி  ஹூவைரா ரோட்ஸ்டெர் கார்கள் மட்டுமே தயாரிக்கப்பட உள்ள நிலை உற்பத்தி தொடங்கப்பட்டுவிட்டதாகவும் பகானி தெரிவிக்கின்றது. மிக இலகுஎடை மற்றும் உறுதிமிக்க கார்பன் ஃபைபர் பாகங்களை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள ஹூவைரா ரோட்ஸ்டெர் மாடலானது விற்பனையில் உள்ள கூபே ரக ஹூவைரா மாடலை விட 80 கிலோ எடை குறைவானதாக விளங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மெர்சிடிஸ் ஏஎம்ஜி M158 6.0 லிட்டர் V12 ட்வீன் டர்போசார்ஜ்டு எஞ்சின் பொருத்தகப்பட்டுள்ள இந்த காரில் 764 hp பவரை வெளிப்படுத்தி 1000Nm டார்க் வரை அதிகபட்சமாக வெளிப்படுத்துகின்றது. ஹூவைரா பிசி காரைவிட 15 ஹெச்பி கூடுதலாகவும் , கூபே ரக ஹூவைரா காரை விட 34 ஹெச்பி கூடுதலாகவும் இதன் பவர் அமைந்துள்ளது. இதில் 7 வேக கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.

ஃபார்முலா 1 பந்தய கார்களை விட மிக சிறப்பான நவீன நுட்பங்களை கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ள ஹூவைரா ரோட்ஸ்டெர் மாடலின் மோனோக்கூ பாடி அமைப்பினை இலகு எடை கொண்ட கார்போ டைட்டானியம் (Carbo-Titanium) மற்றும் கார்போ-டிரைக்ஸ் (Carbo-Triax HP52) பயன்படுத்தப்பட்டுள்ளது.

முன்பக்கத்தில் 20 அங்குல அலாய் விலை , பின் பக்கத்தில் 21 அங்குல அலாய் வில் , முன் பக்க டயரில் 6 பிஸ்டன்களை கொண்ட பிரெம்போ 340×34 மிமீ கொண்ட டிஸ்க் பிரேக்குகள் மற்றும் பின் பக்க டயரில் 4 பிஸ்டன்களை கொண்ட பிரெம்போ 340×34 மிமீ பிரேக்குகளும் பொருத்தப்பட்டுள்ளன. 1280 கிலோஎடை மட்டுமே கொண்டுள்ள ஹூவைரா ரோட்ஸ்டெர் மாடலில் வெட், கம்ஃபோர்ட், ஸ்போர், ரேஸ் மற்றும் ESC off என 5 விதமான மோடுகளை பெற்றுள்ளது.

100 பகானி ஹூவைரா கார்கள் மட்டுமே தயாரிக்கப்பட உள்ளது. விலை மற்றும் மேலும் பல்வேறு தகவல்கள் மார்ச் 7ந் தேதி 2017 ஜெனிவா மோட்டார் ஷோ அரங்கில் வெளியாகும்.

பகானி ஹூவைரா ரோட்ஸ்டெர் காரின் 15 ஹெச்டி படங்கள் இணைப்பு..

[foogallery id=”16844″]

Recommended For You