சுஸுகி பர்க்மன் ஸ்ட்ரீட் ஸ்கூட்டர் அறிமுகம் – ஆட்டோ எக்ஸ்போ 2018

ஆட்டோ எக்ஸ்போ 2018 வாகன கண்காட்சியில் சுஸூகி மோட்டார்சைக்கிள் இந்தியா நிறுவனம், 125 சிசி ஸ்கூட்டர் சந்தையில் ஸ்டைலிஷான சுஸுகி பர்க்மன் ஸ்ட்ரீட் ஸ்கூட்டர் மாடலை அறிமுகப்படுத்தி காட்சிக்கு வைத்துள்ளது.

சுஸுகி பர்க்மன் ஸ்ட்ரீட் ஸ்கூட்டர்

இந்தியாவில் ஸ்கூட்டர் விற்பனை நாளுக்கு நாள் உயர்ந்து வரும் சூழ்நிலையில் முன்னணி தயாரிப்பாளர்கள் ஸ்கூட்டர் மாடல்களில் கூடுதல் சிசி கொண்டவற்றை அறிமுகம் செய்ய தொடங்கியுள்ளனர்.

அந்த வரிசையில் சர்வதேச அளவில் 125சிசி முதல் 683சிசி வரை திறனிலான மேக்ஸி ஸ்கூட்டர் மாடலாக விளங்கும் பர்க்மன் ஸ்கூட்டரை 125சிசி எஞ்சின் கொண்டதாக இந்திய சந்தையில் சுஸூகி இந்த வருடத்தின் இறுதி அல்லது அடுத்த ஆண்டின் தொடக்க மாதங்களில் விற்பனைக்கு வெளியிட உள்ளது.

இந்த ஸ்கூட்டரில் ஃப்யூவல் இன்ஜெக்‌ஷன் பெற்ற 125சிசி எஞ்சின் அதிகபட்சமாக  10.7 பிஹெச்பி ஆற்றல் மற்றும் 10 என்எம் டார்க் வழங்குகின்றது. பர்க்மன் ஸ்டீரிட் ஸ்கூட்டர் அதிகபட்சமாக 40 கிமீ மைலேஜ் தரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

எல்இடி ஹெட்லைட் கொண்ட மிகப்பெரிய அளவிலான ஸ்டைலிஷ் தோற்ற அமைப்பினை பெற்று விளங்கும் இந்த ஸ்கூட்டரில் 14 அங்குல வீல், முழுமையான டிஜிட்டல் கிளஸ்ட்டர், பல்வேறு செயற்பாடுகளுக்கு ஏற்ற கீ ஸ்லாட் ஆகியவற்றுடன் முன்புறத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகளை பெற்று பின்புறத்தில் மோனோஷாக் அப்சார்பரை கொண்டுள்ள இந்த ஸ்கூட்டரில் முன்புற டயரில் டிஸ்க் பிரேக் மற்றும் பின்புறத்தில் டிரம் பிரேக் இணைக்கப்பட்டுள்ளது.

இந்த வருடத்தின் இறுதி மாதங்களில் விற்பனைக்கு வெளியிடப்பட உள்ள சுஸுகி பர்க்மன் ஸ்ட்ரீட் ஸ்கூட்டர் விலை ரூ.68,000 முதல் ரூ.75,000 விலைக்குள் அமைவதற்கான வாய்ப்புகள் உள்ளது.

இதைத் தவிர சுஸூகி மோட்டார்சைக்கிள் நிறுவனம் ஆட்டோ எக்ஸ்போவில் 2018 ஆக்செஸ், ஜிக்ஸெர், ஆகியவற்றுடன் இன்ட்ரூடர் FI, V-Strom 650 XT  ஆகிய மாடல்களை அறிமுகப்படுத்தி காட்சிப்படுத்தியுள்ளது.

Recommended For You