டாடா நெக்சன் ஏரோ கான்செப்ட் அறிமுகம் – ஆட்டோ எக்ஸ்போ 2018

வாடிக்கையாளர்கள் விரும்பும் வகையிலான தோற்ற அமைப்பில் சில மாறுதல்களை பெற்றுள்ள டாடா நெக்சன் ஏரோ எடிசன் மாடல் 2018 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ வாகன கண்காட்சி அரங்கில் காட்சிக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

டாடா நெக்சன் ஏரோ

ஏரோ ஸ்டைல் பாடி கிட்டுகளை பெற்றுள்ள நெக்ஸான் காரில் மிக நேர்த்தியான 16 அங்குல அலாய் வீல் கொண்டதாக காட்சிப்படுத்தப்பட்டுள்ள ஏரோ மாடலில் ஸ்மோக்டு ஹெட்லைட், பக்கவாட்டில் ஸ்கர்ட்டுகள், சிவப்பு நிறத்திலான ஹைலைட்டர்களை கொண்ட முன் மற்றும் பின்புற பம்பர்களை பெற்றதாக வந்துள்ளது.

இன்டிரியர் அமைப்பில் கருப்பு நிற பூச்சினை பெற்றதாக வந்துள்ள நிலையில் மற்றபடி எந்த தோற்ற மாற்றங்களும் பெறவில்லை. எஞ்சின் அமைப்பில் எந்த மாற்றங்களும் இருக்க வாய்ப்பில்லை.

ரெவோட்ரான் பெட்ரோல் எஞ்சின் கூடுதல் பவர் மற்றும் டார்க் பெற்ற எஸ்யூவிக்கு ஏற்ற வகையில் 1.2 லிட்டர் எஞ்சின் அதிகபட்சமாக 108bhp பவருடன் 170Nm டார்க்கினை வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ரெவோடார்க் வரிசையில் புத்தம் புதிதாக வரவுள்ள 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 108bhp பவருடன் 260 Nm டார்க்கினை வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு எஞ்சினிலும்  6 வேக TA6300 சிங்க்ரோமெஸ் மேனுவல் கியர்பாக்ஸ் இடம்பெற்றிருக்கின்றது. இதே எஞ்சினில் ஆட்டோமேட்டிக் மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது

Recommended For You