டாடா டியாகோ EV & டாடா டீகோர் EV அறிமுகம் – ஆட்டோ எக்ஸ்போ 2018

2030 ஆம் ஆண்டு முதல் மின்சார வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்கும் நோக்கில் இந்திய அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கையின் பங்களிப்பாக, டாடா மோட்டார்ஸ் நிறுவனம் டாடா டியாகோ மற்றும் டாடா டீகோர் கார்களில் மின்சாரத்தில் இயங்கும் வகையில் ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகப்படுத்தியுள்ளது.

டாடா டியாகோ EV & டாடா டீகோர்  EV

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் மத்திய அரசின் ஆற்றல் திறன் சேவை லிமிடெட் நிறுவனத்துக்கு 10,000 கார்களை சப்ளை செய்யும் ஆர்டரை பெற்றிருக்கும் நிலையில் முதல் தவனையில் 350 கார்களை டாடா டெலிவரி கொடுத்துள்ளது.

டியாகோ மற்றும் டீகோர் கார்களின் சாதாரண மாடலில் இருந்து வித்தியாசப்படுத்தும் நோக்கில் EV  பேட்ஜை மட்டுமே பெற்று இரு மாடல்களிலும் இன்டிரியர் அமைப்பில் சாதாரண மாடலின் அமைப்பிலே அமைந்துள்ளது.

ஆராய் சான்றிதழின் அடிப்படையில் டியாகோ இவி காரில் 40 பிஹெச்பி பவரை வழங்கும் மூன்று பேஸ் இன்டெக்‌ஷன் மோட்டார் பெற்று அதிகபட்சமாக 45 கிமீ வேகத்தில் பயணிக்கும் திறன் கொண்டதாக வரவுள்ளது.

டியாகோ மற்றும் டீகோர் EV ஆகிய மாடல்கள் குஜராத் மாநிலத்தில் அமைந்துள்ள டாடாவின் சனந்த தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்பட உள்ள மின்சார வாகனத்தின் விலை ரூ.8 லட்சம் முதல் ரூ.11 லட்சம் விலையில் விற்பனைக்கு வெளியிட உள்ளது.

Recommended For You