Home Auto Expo 2023

ஆட்டோ எக்ஸ்போ 2018 : யமஹா ஏரோக்ஸ் 155 ஸ்கூட்டர் அறிமுகம்

வரும் பிப்ரவரி 9ந் தேதி முதல் தொடங்க உள்ள ஆட்டோ எக்ஸ்போ 2018 கண்காட்சியில் இந்தியா யமஹா மோட்டார் நிறுவனம், பெர்ஃபாமென்ஸ் ரக யமஹா ஏரோக்ஸ் ஸ்கூட்டர் மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்ய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

யமஹா ஏரோக்ஸ் 155

இரு சக்கர வாகன சந்தையில் நாளுக்குநாள் ஸ்கூட்டர் விற்பனை அதிகரித்து வரும் சூழ்நிலையில், ஸ்போர்ட்டிவ் மற்றும் பெர்ஃபாமென்ஸ் ரக பிரிவு மாடல்கள் விற்பனை அதிகரித்து வரும் சூழ்நிலையில் ஏப்ரிலியா SR150, கிரேஸியா ஸ்கூட்டர் ஆகிய மாடலுக்கு எதிராக ஏரோக்ஸ் நிலைநிறுத்தப்பட உள்ளது.

தாய்லாந்து மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகளில் விற்பனை செய்யப்பட்டு வரும் ஏரோக்ஸ் ஸ்கூட்டரில் 14bhp ஆற்றல் மற்றும் 13.8Nm டார்க் ஆகியவற்றை வெளிப்படுத்தும் ஃப்யூவல் இன்ஜெக்‌ஷன் உடன் கூடிய  155சிசி VVA ( Variable Valve Actuation ) ஒற்றை சிலிண்டர் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது.

நேக்டு பைக்குகளுக்கு இணையான ஸ்போர்ட்டிவ் ஸ்கூட்டராக விளங்குகின்ற ஏரோக்ஸ் 155 மாடலில் எல்இடி ஹெட்லேம்ப்,எல்இடி டெயில்லைட், 5.8 அங்குல டிஸ்பிளே, ஸ்மார்ட் கீ சிஸ்டம், மொபைல் சார்ஜிங் போர்ட் மற்றும் 25 லிட்டர் கொள்ளளவு கொண்ட ஸ்டோரேஜ் ஆகியவற்றை பெற்றதாக வரவுள்ளது.

வரவுள்ள ஆட்டோ எக்ஸ்போ 2018 அரங்கில் காட்சிக்கு வரவுள்ள யமஹா ஏரோக்‌ஸ் 155 மாடல் ரூ.1 லட்சம் தொடக்க விலையில் விற்பனைக்கு வெளியிடப்பட வாய்ப்புகள் உள்ளது. மேலும் யமஹா நிறுவனத்தின் R15 V3.0 மாடல் விற்பனைக்கு வெளியிடப்பட உள்ளது.

Exit mobile version