ஹோண்டா நியோ ஸ்போர்ட்ஸ் கஃபே கான்செப்ட் அறிமுகம் – TOKYO MOTOR SHOW 2017

ஜப்பான் தலைநகர் டோக்கியா நகரில் நடைபெற்று வரும் 2017 டோக்கியா மோட்டார் ஷோ அரங்கில் புதிய ஹோண்டா நியோ ஸ்போர்ட்ஸ் கஃபே கான்செப்ட் ரேஸர் பைக் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஹோண்டா நியோ ஸ்போர்ட்ஸ் கஃபே

பல்வேறு டீசர்களை தொடர்ந்து முதன்முறையாக ஹோண்டா நிறுவனத்தின் ரெட்ரோ வடிவ தாத்பரியங்களை பெற்ற நியோ ஸ்போர்ட்ஸ் கஃபே ரேசர் கான்செப்ட் மாடல் வெளியிடப்பட்டுள்ளது.

புராஜெக்ட் N.S.C என்ற பெயரில் முன்பு அறியப்பட்டு வந்த இந்த மாடல் CB1000R தோற்ற உந்துதலை பெற்றதாக வடிவமைக்கப்பட்டுள்ள பழைய தோற்ற வடிவமைப்புடன் கூடிய நியோ ஸ்போர்ட்ஸ் மாடலில் 998cc எஞ்சின் பெற்றதாக வரவுள்ளது.

எல்இடி விளக்குளுடன் கூடிய வட்ட வடிவ முகப்பு விளக்கு, தட்டையான வடிவமைப்புடன் நீளமான டெயில் பகுதியை கொண்டதாகவும், அசத்தலான அம்சத்தை கொண்டிருக்கின்ற கான்செப்ட் மாடல் மிக சிறப்பான வடிவமைப்பை பெற்ற நேக்டு ஸ்போர்ட்டிவ் மாடலாக விளங்குகின்றது.

நவம்பர் 6ந் தேதி நடைபெற உள்ள மிலன் EICMA 2017 அரங்கில் உற்பத்தி நிலை ஹோண்டா நியோ ஸ்போர்ட்ஸ் கஃபே அறிமுகம் செய்யப்பட உள்ளது.

Recommended For You