ஹோண்டா அர்பன் EV கான்செப்ட் அறிமுகம் – பிராங்பேர்ட் மோட்டார் ஷோ 2017

முழுமையான மின்சாரத்தில் இயங்கும் காராக 2019 ஆம் ஆண்டில் உற்பத்திக்கு செல்ல உள்ள ஹோண்டா அர்பன் EV கான்செப்ட் கார் மாடலை 2017  பிராங்பேர்ட் மோட்டார் ஷோவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஹோண்டா அர்பன் EV கான்செப்ட்

2017  பிராங்பேர்ட் மோட்டார் ஷோ 14-24 வரை நடைபெற உள்ள நிலையில் இன்றைக்கு இந்த மாடலின் கான்செப்ட் கார் மோட்டார் ஷோ அரங்கில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.  மிகவும் நேர்த்தியான டிசைன் அம்சங்களுடன் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அறிமுகம் செய்யப்பட உள்ள மாடலாகும்.

5 இருக்கைகள் கொண்ட இந்த ஹேட்ச்பேக் மாடல் ரெட்ரோ டிசைன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. கான்செப்ட் அடிப்படையில் மிக நேர்த்தியான மிக அகலமான தொடுதிரை வசதியுடன் பல்வேறு நவீன அம்சங்களுடன் முழுமையான மின்சார காராக இருக்கும் என ஹோண்டா அறிவித்துள்ளது.

2019 ஆண்டில் உற்பத்திக்கு செல்ல உள்ள மின்சார கார ஐரோப்பா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் உற்பத்தி மற்றும் விற்பனைக்கு செல்ல உள்ளது.

Honda Urban EV Concept image gallery

Recommended For You