ஃபோக்ஸ்வேகன் அமியோ உற்பத்தி ஆரம்பம்

0

மிகுந்த எதிர்பார்ப்புகளை ஏற்படுத்திவரும் கார்களில் ஃபோக்ஸ்வேகன் அமியோ காம்பேக்ட் காருக்கு முக்கிய இடம் உள்ளது. ஃபோக்ஸ்வேகன் சக்கன் ஆலையில் அமியோ கார் உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது.

Volkswagen-Ameo-rolled-out-of-Volkswagen-Pune-Plant

இந்திய சந்தைக்காக ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் ரூ.720 கோடி முதலீட்டில் மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் அமியோ காரினை உருவாக்கியுள்ளது. காம்பேக்ட் ரக செடான் கார்களான டிசையர் ,  எக்ஸ்சென்ட் , அமேஸ் , ஸெஸ்ட் போன்ற கார்களுடன் நேரடியான போட்டியை அமியோ சந்திக்க உள்ளது.

போலோ காரினை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள அமியோவின் அனைத்து வேரியண்டிலும் முன்பக்க இரட்டை காற்றுப்பைகள்  மற்றும் ஏபிஎஸ் நிரந்தர பாதுகாப்பு அம்சமாக இணைக்கப்பட்டுள்ளது. 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என இரண்டிலும் வரவுள்ளது. டீசல் வேரியண்டில் மட்டும் இருவிதமான ஆற்றலை கொண்ட என்ஜினாக செயல்படும். மெனுவல் தவிர ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இடம்பெற்றிருக்கும்.

அமியோ காரில் பல நவீன வசதிகள் முதன்முறையாக காம்பேக்ட் செடான் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளது. குறிப்பாக க்ரூஸ் கன்ட்ரோல் , மழையை உணர்ந்து செயல்படும் வைப்பர் , ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா , ஸ்டேட்டிக் கார்னரிங் விளக்கு மேலும் பல…

கடந்த மே 12,2016 முதல் ஃபோக்ஸ்வேகன் டீலர்கள் வாயிலாக முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது. மேலும் ரோட்ஷோ நடத்தப்பட்டது. தற்பொழுது உற்பத்தியும் தொடங்கப்பட்டுள்ளதால் வருகின்ற ஜூன் மாதத்தின் முதல் வாரத்தில் அதிகார்வப்பூர்வமாக அமியோ விற்பனைக்கு வருகின்றது.

volkswagen-ameo

இதுகுறித்து ஃபோக்ஸ்வேகன் இந்தியா பிரிவு தலைமை நிர்வாக இயக்குநர்  ஆன்டரஸ் லேயூர்மென் கூறுகையில் ஃபோக்ஸ்வேகன் இந்தியா நிறுவனத்தின் பயணத்தில் இந்த நாள் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.  அமியோ இந்திய வாடிக்கையாளர்களுக்காகவே உருவாக்கப்பட்டுள்ளதால் மிக சிறப்பான வரவேற்பினை பெறும் என தெரிவித்துள்ளார்.

ஃபோக்ஸ்வேகன் சக்கன் ஆலையில் போலோ , வென்ட்டோ மற்றும் ஸ்கோடா ரேபிட் போன்ற கார்களும் தயாரிக்கப்படுகின்றன.