Automobile Tamilan

ஃபோர்டு ஆஸ்பயர் காரின் என்ஜின் மற்றும் மைலேஜ் விபரம்

புதிய ஃபோர்டு ஃபிகோ ஆஸ்பயர் செடான் காரின் என்ஜின் மற்றும் மைலேஜ் விபரங்கள் வெளிவந்துள்ளது. பிகோ ஆஸ்பயர் இரண்டு பெட்ரோல் மற்றும் ஒரு டீசல் என்ஜின் ஆப்ஷனில் விற்பனைக்கு வரவுள்ளது.
ஃபோர்டு ஆஸ்பயர்
ஃபோர்டு ஃபிகோ ஆஸ்பயர்

ஃபிகோ ஆஸ்பயர் மிக விரைவில் விற்பனைக்கு வரவுள்ள நிலையில் இதன் போட்டியாளர்களாக விளங்கும் கார்கள் டிசையர் , அமேஸ் , ஸெஸ்ட் மற்றும் எக்ஸ்சென்ட்.

ஃபிகோ ஆஸ்பயர் என்ஜின் விபரம்

1.  88.8 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தக்கூடிய 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் முறுக்குவிசை 112என்எம் ஆகும். இதில் 5 வேக மெனுவல் டிரான்ஸ்மிஷன் பொருத்தப்பட்டிருக்கும்.

ஆஸ்பயர் 1.2 லிட்டர் என்ஜின் மைலேஜ் லிட்டருக்கு 18.6 கிமீ ஆகும்.

2.  110.5 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தக்கூடிய 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் முறுக்குவிசை 136என்எம் ஆகும். இதில் 6 வேக டியூவல் ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷன் பொருத்தப்பட்டிருக்கும்.

ஃபோர்டு ஃபிகோ ஆஸ்பயர் 1.5 லிட்டர் என்ஜின் மைலேஜ் லிட்டருக்கு 17.2கிமீ ஆகும்.

3. 98.6 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தக்கூடிய 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் முறுக்குவிசை 215என்எம் ஆகும். இதில் 6 வேக டியூவல் ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷன் பொருத்தப்பட்டிருக்கும்.

ஆஸ்பயர் 1.2 லிட்டர் என்ஜின் மைலேஜ் லிட்டருக்கு 25.83கிமீ ஆகும்.

அளவுகள்

ஃபோர்டு ஆஸ்பயர் காரின் நீளம் 3995மிமீ , ஆகலம் 1695மிமீ மற்றும் உயரம் 1525 மிமீ ஆகும். இதன் வீல்பேஸ் 2491மிமீ ,கிரவுண்ட் கிளியரன்ஸ் 174மிமீ ஆகும். இதன் பூட் வசதி கொள்ளளவு 359 லிட்டர் ஆகும்.

சிறப்பம்சங்கள்

காம்பெக்ட் செடான் சந்தையில் முதன்முறையாக ஃபிகோ ஆஸ்பயர் காரில் மொத்தம் 6 காற்றுப்பைகள் நிரந்தர அம்சமாக அனைத்து வேரியண்டிலும் இருக்கும் ஏபிஎஸ் ,இபிடி போன்ற பாதுகாப்பு அம்சங்கள் இருக்கும்.

ஆஸ்பயர் கார் அம்பியன்ட் , டிரென்ட் , டைட்டானியம் மற்றும் டைட்டானியம் ஃபிளஸ் வேரியண்டில் கிடைக்கும். மேலும் 6 விதமான வண்ணங்களில் ஃபிகோ ஆஸ்பயர் கிடைக்கும்.

Ford Figo Aspire Engine details Revealed 

Exit mobile version