1200 டிரக்குகளுக்கு ஆர்டர் பெற்ற அசோக் லேலண்டு

இந்தியாவின் ஸ்டார்ட்அப் நிறுவனமான ரிவிகோ லாஜிஸ்டிக்ஸ் ரூ.500 கோடி மதிப்பில் 1200 டிரக்குகளுக்கான ஆர்டரை அசோக் லேலண்டு நிறுவனத்துக்கு வழங்கியுள்ளது. 80 சதவீத திறனை உயர்த்தும் நோக்கில் 2700 டிரக்குகளை அடுத்த 6-7 மாதங்களில் இயக்க ரிவிகோ திட்டமிட்டுள்ளது.

 

ashok-leyland-boss-truck

நடுத்தர மற்றும் கனரக வாகனங்களில் கொடுக்கப்பட்டுள்ள 1200 டிரக்குகளில் அசோக் லேலண்டு நிறுவனத்தின் பிரசத்தி பெற்ற பாஸ் டிரக் மாடலும் அடங்கும். மிக வேகமாக வளர்ந்து வரும் ரிவிகோ லாஜிஸ்டிக்ஸ் நிறுவனம் குர்கானை தலைமையிடமாக கொண்டு செயல்படுகின்றது.

இதுகுறித்து ரிவிகோ நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி தீபக் கார்க் கூறுகையில் எங்களுடைய சேவையில் இது முக்கியமானதாகும். எங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான சேவையை வழங்கும் வகையில் இந்த ஆர்டர் அமையும் என தெரிவித்துள்ளார். மேலும அசோக் லேலண்டு பாஸ் டிரக் குறித்து தெரிவிக்கையில்  அசோக் லேலண்ட் வாகனங்கள் மிக சிறப்பான தரம் , ஈடுபாடு மற்றும் விற்பனைக்கு பின்னர் சிறப்பான சேவை போன்றவற்றில் எங்கள் நிறுவனத்துக்கு மிக சிறப்பான வலுவினை சேர்க்கின்றது. புதிய ஆர்டர் இரு நிறுவனங்களுக்கு உண்டான உறவினை வலுப்படுத்தும் என குறிப்பிட்டுள்ளார்.

சர்ஃபேஸ் போக்குவரத்தில் ” ரிவிகோ டிரைவர் ரிலே ” முறையின் வாயிலாக 50-70 சதவீதம் வரையிலான டெலிவரி நேரத்தை பாரம்பரிய டிரக் முறையிலிருந்து சேமிக்கும் வகையில் அமைந்துள்ளது.

இந்தியாவின் 2வது மிகப்பெரிய வர்த்தக வாகன தயாரிப்பாளரான அசோக் லேலண்ட் நிறுவனத்தின் பாஸ் நடுத்தர டிரக் பிரிவில் மிகச்சிறப்பான  மாடலாக விளங்குகின்றது.

Exit mobile version