செவர்லே நிறுவனத்தின் என்ஜாய் எம்பிவி கார் மிக மலிவான விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதனால் எம்பிவி சந்தையில் சற்று சலசலப்பினை ஏற்படுத்தியுள்ளது. எம்பிவி பிரிவில் முன்னணி வகிக்கும் மாருதி எர்டிகாவிற்க்கு கடுமையான சவால் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
செவர்லே நிறுவனத்தின் இந்திய பிரிவின் முதல் எம்பிவி காரான என்ஜாய் பெட்ரோல் மற்றும் டீசல் உள்ப்பட மொத்தம் 8 வேரியண்டில் வெளிவந்துள்ளது.
செவர்லே என்ஜாய் காரில் 1.3 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும்.இதன் ஆற்றல் 77.5 பிஎஸ் ஆகும் மற்றும் டார்க் 188 என்எம் ஆகும்.
செவர்லே என்ஜாய் காரில் 1.4 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும். இதன் ஆற்றல் 104 பிஎஸ் ஆகும் மற்றும் டார்க் 131 என்எம் ஆகும்.
பேஸ் மாடலான எல்எஸ் வேரியண்டில் மட்டும் 8 இருக்கைகள் மற்றவையில் 7 இருக்கைகள் ஆகும். எர்டிகா காரை விட ரூ.40000 குறைவாக இருப்பது நல்ல பலமாக அமையும்.
செவர்லே என்ஜாய் விலை பட்டியல் (டெல்லி எக்ஸ்ஷோரூம்)
என்ஜாய் பெட்ரோல் மாறுபட்டவைகள்
எல்எஸ்(8 சீட்டர்) : ரூ.5.49 லட்சம்
எல்எஸ்(7 சீட்டர்) : ரூ.5.64 லட்சம்
எல்டி (7 சீட்டர்) : ரூ.6.31 லட்சம்
எல்டிஇசட்(7சீட்டர்): ரூ.6.99 லட்சம்
என்ஜாய் டீசல் மாறுபட்டவைகள்
எல்எஸ்(8 சீட்டர்) : ரூ.6.69 லட்சம்
எல்எஸ்(7சீட்டர்) : ரூ.6.75 லட்சம்
எல்டி(7 சீட்டர்) : ரூ.7.42 லட்சம்
எல்டிஇசட்(7 சீட்டர்) : ரூ.7.99 லட்சம்