ஆடி கார் ஐஸ்வர்யா பிஎம்டபுள்யு சித்தார்த் – தொடரும் அப்பாவி கொலைகள்

கடந்த ஜூலை 2ந் தேதி சென்னை பழைய மாமல்லபுரம் சாலையில் குடிபோதையில் காரை ஓட்டி அப்பாவி முனுசாமியை கொன்றது ஆடி கார் ஜஸ்வர்யா போல ராஜஸ்தான் மாநிலத்தில் எம்எல்ஏ மகன் பிஎம்டபுள்யூ கார் சித்தார்த் ஆட்டோவில் பயணித்த 3 பேரை  கொலை செய்துள்ளனர்.

munusawamy-wife-and-children

இருவருக்கும் ஓற்றுமை என்னவேன்றால் ஆடம்பர சொகுசு கார் , பகட்டான வாழ்க்கையில் அளவுக்கு அதிகமான குடிபோதையில் காரை இயக்கி நடுத்தர மக்களின் வாழ்க்கையை கேள்விக்குறியாக்கி உள்ளனர்.

ஆடி கார் ஜஸ்வர்யா

முனுசாமி (54) என்கின்ற தச்சு தொழில் செய்து தன்னுடைய குடும்ப தேவைகளை பூர்த்தி செய்து மகன் மற்றும் மகளை படிக்க வைத்து வந்தவரின் வாழ்க்கையில் அவரது மரணம் குடும்பம் மற்றும் குழந்தைகளின் எதிர்காலத்தை கேள்விகுறியாக்கிவிட்டது. தினக்கூலி வேலை செய்து தன் குடும்பத்தை காப்பாற்றி வந்தவருக்கு மது அருந்தி விட்டு உல்லாச வாழ்க்கை பிரியரான   ஆடி கார் ஐஸ்வர்யா நீதிமன்றத்தில் ஜாமின் கோரி அவர் தாக்கல் செய்த மனுவில்

கடந்த 1-ம் தேதி என்னுடைய நண்பர்களுடன் இரவு சினிமாவிற்குச் சென்றுவிட்டு ஓ.எம்.ஆர் ரோட்டில் வேலை பார்க்கும் நண்பர் ஒருவரை அழைத்துக் கொண்டு, எனது காரில் வந்து கொண்டிருந்தேன். அப்போது சாலையைக் கடக்க முயன்ற முனுசாமி என்பவர்  என்னுடைய ஆடி காரில்  அடிபட்டுவிட்டதாக சொல்கின்றனர். அந்த விபத்தில் முனுசாமி என்பவர் சம்பவ இடத்தில் உயிர் இழந்தார்.

அங்கிருந்த போலீஸார் என்னைப் பிடித்து விசாரித்துவிட்டு, 2-ம் தேதி என்னைக் கைது செய்தனர். என் மீது மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டி விபத்து ஏற்படுத்தியது; கவனக்குறைவால் விபத்தை உருவாக்கியது உள்ளிட்ட சட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. எனக்கு இன்னமும் திருமணம் ஆகவில்லை. பல்வேறு போட்டிகளில் பங்கேற்று பரிசுகள் வாங்கியிருக்கிறேன். எனக்கு ஜாமீன் வழங்க வேண்டும்’ எனக் குறிப்பிட்டிருந்தார்.

இவரது ஜாமின் மனு தற்பொழுது தள்ளுபடி செய்யப்பட்டுள்ள நிலையில்…

பிஎம்டபுள்யு சித்தார்த்

ராஜஸ்தான் மாநில ஜெய்ப்பூர் மாநகரில் உள்ள நந்திகிஷோர் மஹிரா என்கின்ற சுயேட்சை எம்எல்ஏ மகன் சித்தார்த் நேற்று இரவு 2 மணி அளவில் பிஎம்டபிள்யூ 5 சீரிஸ் காரை மணிக்கு 100 கிமீ வேகத்தில் குடிபோதையில் ஓட்டி ஆட்டோரிக்‌ஷாவில் பயணித்த மூன்று நபர்கள் கொலை செய்துள்ளார் . மேலும் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த 4 போலீசார் காயமடைந்துள்ளனர். அதில் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

முதற்கட்ட விசாரனையில் பிஎம்டபுள்யூ காரில் ஓட்டிவந்த சித்தார்த் மஹிரா  ரத்தத்தில் ஆல்காஹல் சோதனை செய்யப்பட்டதில் அனுமதிக்கப்பட்ட அளவை விட 5 மடங்கு கூடுதலாக அதாவது 100மிலி ரத்த மாதிரியில் 152மிகி ஆல்கஹால் உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அனுமதிக்கப்பட்ட அளவு 100 மில்லிகிராம் ரத்தத்தில் 30 மில்லிகிராம் மட்டுமே இருக்க வேண்டும் என்பதாகும். விபத்து நடந்தபொழுது கண்கானிப்பு கேமராவில் பதிவாகியுள்ள வீடியோவினை போலீசார் வெளியிட்டுள்ளனர்.

[youtube https://www.youtube.com/watch?v=ghL31iRsKvw]
இரு ஆதிக்க பேர்வழிகளின்  போதை ஆட்டத்தில் வாழ்க்கையை இழந்தது என்னவோ அப்பாவிகள்தான். இந்த இருவேறு வழக்கிலும் இந்திய தண்டனைச் சட்டம்  304-பிரிவு(2)ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Exit mobile version