Home Auto News

ஆடி க்யூ3 பெட்ரோல் எஞ்சின் மாடல் விரைவில்

இந்தியாவின் சொகுசு கார் விற்பனையில் முக்கிய பங்காற்றும் ஆடி கார் நிறுவனம் தன்னுடைய கார் மாடல்கள் அனைத்திலும் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்ட மாடல்களை அறிமுகம் செய்ய உள்ளது. ஆடி க்யூ3 காரில் பெட்ரோல் மாடல் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

2015-Audi-Q3-facelift

இந்தியாவில் டீசல் கார்களுக்கு விதிக்கப்பட்ட தடையால் பெரும்பாலான கார் நிறுவனங்கள் டெல்லி மற்றும் தலைநகர் பகுதியில் சந்தையை இழந்த நிலையில் அனைத்து ஆட்டோமொபைல் நிறுவனங்களும் பெட்ரோல் மாடல்களை களமிறக்குவதில் ஆர்வம் காட்ட தொடங்கியுள்ளது. ஆடி நிறுவனம் டீசல் கார் தடையின் காரணமாக 1500-2000 கார்கள் விற்பனை செய்ய முடியாமல் ரூ.760 கோடி அளவில் இழப்பினை அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆடி A6, Q3 மற்றும் Q7 போன்ற மாடல்கள் விரைவில் பெட்ரோல் எஞ்சின் மாடல்களை பெற உள்ள நிலையில் ஆடி க்யூ3 மாடல் அடுத்த சில நாட்களில் 1.4 லிட்டர் டிஎஸ்ஐ பெட்ரோல் எஞ்சினுடன் வெளியாக உள்ளது.

ஆடி க்யூ3 காரில் 148 BHP ஆற்றலை வெளிப்படுத்தும் 1.4லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் டார்க் 250 Nm ஆகும். இதில் 6 வேக டிசிடி கியர்பாக்சினை பெற்று முன்பக்க வீல்களுக்கு ஆற்றலை கடத்துகின்றது. ஆடி க்யூ3 காரின் உச்ச வேகம் மணிக்கு 240 கிலோமீட்டர் ஆகும். 0-100 கிமீ வேகத்தை எட்ட 8.9 விநாடிகள் எடுத்துக்கொள்ளும்.

மெர்சிடிஸ்-பென்ஸ ஜிஎல்இ 400 பெட்ரோல் எஞ்சின் மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் மற்றும் 5 சீரிஸ் கார்களிலும் பெட்ரோல் மாடல் வெளியாகியுள்ளது.

Exit mobile version