டொயோட்டா இன்னோவா க்ரீஸ்ட்டா அடுத்த சில வாரங்களில்

புதிய தலைமுறை டொயோட்டா இன்னோவா க்ரீஸ்ட்டா அடுத்த சில வாரங்களில் விற்பனைக்கு வரவுள்ள நிலையில் விற்பனையகங்களை கார் வந்தடைய தொடங்கியுள்ளது. இன்னோவா க்ரீஸ்ட்டா ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷனிலும் வரவுள்ளது.

toyota-innova-crysta-mpv

புதிய டொயோட்டா இன்னோவா க்ரீஸ்ட்டா காரில் பெட்ரோல் மற்றும் டீசல் என இரு என்ஜின் ஆப்ஷனிலும் வருவது உறுதியாகியுள்ளது.  2.4 லிட்டர் GD டீசல் என்ஜின் மற்றும் 2.0 லிட்டர் TR பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும்.

டெல்லி நகரத்தில் டீசல் கார் தடையை தொடர்ந்து பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்ட கார்களை களமிறக்குவதில் கார் நிறுவனங்கள் ஆர்வம் கொண்டுள்ளது. இன்னோவா காரில் 139PS ஆற்றலை வெளிப்படுத்தும் 2.0 லிட்டர் TR பெட்ரோல் என்ஜின் பயன்படுத்தப்பட்டிருக்கும். இதன் டார்க் 184 Nm வெளிப்படுத்தும். இதில் 5 வேக மெனுவல் மற்றும் 6 வேக ஆட்டோமேட்டிக் இடம்பெற்றிருக்கும்.

 

2.4 லிட்டர் GD டீசல் என்ஜின் ஆற்றல் 149 PS மற்றும் டார்க் 342 Nm டார்க் வெளிப்படுத்ததும். இதில்  5 வேக மெனுவல் மற்றும் 6 வேக ஆட்டோமேட்டிக் இடம்பெற்றிருக்கும்.

4 விதமான வேரியண்டில் இரு விதமான ஆட்டோமேட்டிக் ஆப்ஷனை பெற்றிருக்கும் , 17 இஞ்ச் அலாய் வீல் , 7 இஞ்ச் தொடுதிரை நேவிகேஷன் அமைப்பு , முன்பக்க இரு காற்றுப்பைகள் , ஏபிஎஸ் , இபிடி , பல தகவல்களை வழங்கும் டிஸ்பிளே என பல நவீன வசதிகளை பெற்றுள்ளது.

Exit mobile version