டாப் 100 பிராண்டுகளில் ஆப்பிள் #1 , கூகுள் #2 உள்ளது. அமேசான் நிறுவனம் முதன்முறையாக முதல் 10 இடங்களுக்குள் வந்துள்ளது. அதாவது 10ம் இடத்தினை பிடித்துள்ளது. ஃபேஸ்புக் #23 உள்ளது.
டொயோட்டா
ஆட்டோமொபைல் துறையில் முதலிடத்தை டொயொட்டா நிறுவனம் பெற்றுள்ளது. கடந்த ஆண்டில் 8வது இடத்தில் இருந்த டொயோட்டா நிறுவனம் இந்த ஆண்டு 16 % வளர்ச்சி பெற்று 6வது இடத்திற்க்கு முன்னேறியுள்ளது.
ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் மாசு அளவு பிரச்சையின் காரணமாக பிராண்டு மதிப்பினை 9 சதவீதம் வரை இழந்து 35வது இடத்தில் உள்ளது. ஃபோக்ஸ்வேகன் பிராண்டு சரவினை பெற்ற ஒரே ஆட்டோமொபல் நிறுவனமாகும்.
புதிதாக பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் மினி பிராண்டு முதல் 100 இடங்களுக்குள் அதாவது 98வது இடத்தினை பிடித்துள்ளது.
டாப் 100 பிராண்டுகளில் இருக்கும் ஒரே இரு சக்கர நிறுவனம் ஹார்லி டேவிட்சன் மட்டும். இதன் தரவரிசை 79 ஆகும்.
ஆட்டோமோட்டிவ் துறையில் மிக அபரிதமான பிராண்டு வளர்ச்சியை நிசான் பெற்றுள்ளது. கடந்த ஆண்டை விட 19 சதவீத வளர்ச்சி பெற்று பட்டியலில் 49வது இடத்தில் உள்ளது.
டாப் ஆட்டோமொபைல் பிராண்டுகள்
வளர்ச்சி
கடந்த ஆண்டை விட 54 சதவீத அபரிதமான வளர்ச்சி பெற்று ஃபேஸ்புக் 23வது இடத்தில் உள்ளது. அதனை தொடர்ந்து ஆப்பிள் (43%) , அமேசான் (29 %), ஹேர்ம்ஸ் (22%) மற்றும் நிசான் (19%)
உலகின் டாப் 10 பிராண்டுகள்
புதிய பிராண்டுகள்
முதல் 100 பிராண்டுகள் தரவரிசை பட்டியலில் புதிதாக இணைந்துள்ள பிராண்டுகள் லிகோ (#82) , பேபேல் (#97), மினி (#98), மோட் & சோன்ந்தன் (#99) மற்றும் லேனோவா (#100)