எரிபொருள் சிக்கனம் இந்தியர்கள் மனநிலை – ஷெல் சர்வே

0
இந்தியர்கள் எரிபொருள் சிக்கனத்தினை உணர்ந்துள்ளனரா ? என்பதனை ஷெல் எரிபொருள் சேமிப்பு  உண்மை அல்லது கற்பனை என்ற பெயரில் ஷெல் நிறுவனம் சர்வே எடுத்துள்ளது.

எரிபொருள் சிக்கனம் ஷெல் சர்வே

நாடு முழுதும் உள்ள 18 முதல் 40 வயது உள்ள 1000 ஓட்டுநர்களை  கொண்டு இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த ஆய்வில் இந்தியர்களின் எரிபொருள் சிக்கனம் பற்றி உள்ள மனநிலையை தெளிவாக தெரிகின்றது.

ஷெல் ஃபேக்ட் அல்லது ஃபிக்‌ஷன் ஆய்வறிக்கை விபரம்

 10யில் 8 நபர்கள் எரிபொருள் சிக்கனம் முக்கியம் என கருதுகிறார்கள். ஆனால் 3ல் 2 நபர்களுக்கு எவ்வாறு சேமிக்க வேண்டும் என்ற தெரியவில்லை என்பதனால் 54 சதவீதத்திற்கு அதிகமானோர் மிகுந்த கவலைப்படுகின்றனராம்.

எரிபொருள் சிக்கனம் ஷெல் சர்வே

இந்திய ஓட்டுநர்களின் எரிபொருள் சேமிப்பு வழிகள்

1. 95 சதவீத ஓட்டுநர்கள் காற்றினால் ஏற்படும் எரிபொருள் இழப்பினை தடுக்கு வின்டோ ஜன்னல்கள் மூடி ஏசியை ஆன் செய்கிறார்களாம்.

2. 92 சதவீத ஓட்டுநர்கள் என்ஜின் சூடாக்கி விட்டு பின்பு வாகனத்தை இயக்குகிறார்களாம்.

3. 55 சதவீத ஓட்டுநர்கள் வாகனத்தினை மெல்லமாக இயக்கினால் அதிக எரிபொருள் சிக்கனம் கிடைக்கும் என தெரிவித்துள்ளனர்.

4. எரிபொருள் கலனில் உள்ள காற்றினை வெளியேற்ற வேண்டும் என 49 சதவீதம் பேர் கருதுகிறார்களாம்.

5. 63 % பேர் டேங்க பாதி மட்டுமே நிரப்ப வேண்டும் என நினைகிறார்களாம்.

யார் பொறுப்பாளர்கள் ?

எதிர்காலத்தில் எரிபொருள் சிக்கனத்திற்க்கு யார் பொறுப்பாளர்கள் ?

86 சதவீதம் பேர் ஓட்டுநர்களே பொறுப்பு என்றும் , 81 சதவீதம் அறிவியல் வல்லுநர்கள் எனவும் , 82 சதவீதம் பொறியார்கள் எனவும் தெரிவித்துள்ளனர்.

எரிபொருள் சிக்கனம் ஷெல் சர்வே

புதிய எரிபொருள் கண்டுபிடிக்க வேண்டிய அவசியம் 85 சதவீதம் , அதிக எரிபொருள் சிக்கனம் தரும் வாகனத்தினை உருவாக்க 90 % விரும்புகிறர்களாம்.

மேலும் வாசிக்க

 எரிபொருள் சேமிக்க 10 எளிய வழிகள்

பெட்ரோல், டீசல் சேமிக்க சிறந்த 10 வழிகள்

 கார் மற்றும் பைக் டிப்ஸ்
Shell Fuel Economy Fact or Fiction report