Automobile Tamilan

ஏஎம்டி என்றால் என்ன ?

ஏஎம்டி (ஆட்டோமேட்டிக் மெனுவல் டிரான்ஸ்மிஷன் ) என்றால் என்ன ? கிளட்ச் பெடல் உதவி இல்லாமால் கியர்களை மேனுவலாக மாற்றிக்கொள்ளும் நுட்பம்தான் ஏஎம்டி அதாவது ஆட்டோமேட்டிக் மெனுவல் டிரான்ஸ்மிஷன் ஆகும்.

இந்தியாவில் முதன்முறையாக மாருதி சூசுகி நிறுவனம் செலிரியோ காரில் ஏஎம்டி கியர்பாக்ஸ் பொருத்தி விற்பனைக்கு கொண்டு வந்தது. அதனை தொடர்ந்து டாடா நிறுவனம் செஸ்ட் செடான் காரில் பொருத்தி விற்பனைக்கு கொண்டு வந்தது.  இந்த இரண்டு கார்களுமே மிக அதிகப்படியான வரவேற்ப்பினை பெற்றுள்ளது.

டாடா நிறுவனம் ஆட்டோமேட்டிக் மெனுவல் டிரான்ஸ்மிஷன் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்ட நானோ காரினை விரைவில் விற்பனைக்கு கொண்டு வரவுள்ளது. மேலும் மாருதி நிறுவனம் தனது மற்ற மாடல்களிலும் பொருத்த திட்டமிட்டுள்ளது.

மேலும் மஹிந்திரா , ரெனோ-நிசான் , என மற்ற நிறுவனங்களும் ஆட்டோமேட்டிக் மெனுவல் டிரான்ஸ்மிஷன் கியர்பாக்ஸ்க்கு முக்கியம் கொடுக்க தொடங்கியுள்ளது.

நெரிசல் நிறைந்த இந்திய சாலைகளில் கிளட்ச்சின் உதவி இல்லாமல் கார்களை இயக்குவதற்க்கு எளிமையாக உள்ளது.

தற்பொழுது இந்தியாவில் ஏஎம்டி கியர்பாக்ஸ்களை இத்தாலியின் மேக்னட் மார்ரலீ நிறுவனம் (ஃபியட் குழுமம்) மட்டுமே வழங்கி வருகின்றது.

மெனுவல் கார்களை விட 20 முதல் 30 சதவீத கூடுதல் விலையில் தானியங்கி கார்களின் விலை உள்ளது. ஆனால் ஆட்டோமேட்டிக் மெனுவல் டிரான்ஸ்மிஷன் கார்களின் விலை 5 முதல் 10 % வரை மட்டுமே கூடுதலாக உள்ளது.

எலக்ட்ரானிக் உதவியுடன் ஏஎம்டி கியர்பாக்ஸ் இயங்குகின்றது. மேலும் தானியங்கி கார்களை விட சிறப்பான எரிபொருள் சிக்கனத்தினை ஆட்டோமேட்டிக் மெனுவல் டிரான்ஸ்மிஷன் வழங்குகின்றது.

போஸ் இ-கிளட்ச்

ராபர்ட் போஸ் நிறுவனம் இ-கிளட்ச் என்ற பெயரில் உருவாக்கி வரும் நுட்பத்தில் முதல் கியருக்கு கிளட்ச் என்கேஜ் இல்லாமல் வாகனத்தினை இயக்க முடியும். மேலும் எரிபொருள் சிக்கனம் மற்றும் நெரிசல் மிகுந்த சாலைகளில் இலகுவாக வாகனத்தினை இயக்க முடியும்.

போஸ் இ-கிளட்ச்

இ-கிளட்ச் என்பது கிளட்ச் மட்டுமே தானியங்கி சிக்னலுக்கு ஏற்ப இயங்கும். கியர் ஸ்ஃப்டிங் மெனுவலாகும். தானியங்கி மற்றும் மெனுவல் கியர்பாக்ஸகளுக்கு இடையில் இந்த நுட்பம் நிலைநிறுத்தப்படும். வரும் 2016ம் ஆண்டில் இ-கிளட்ச் நுட்பம் சந்தைக்கு வரவுள்ளது.

2020 ஆம் ஆண்டில் இந்தியாவில் இயங்கும் இரண்டு கார்களில் ஒன்று ஆட்டோமேட்டிக் மெனுவல்  கியர்பாகஸ் பொருத்தப்பட்ட மாடலாக விளங்கும்.

Exit mobile version