ஏபிஎஸ் மற்றும் சிபிஎஸ் பைக்கில் கட்டாயம்

ஏபிஎஸ் மற்றும் சிபிஎஸ் போன்ற பிரேக்கிங் பாதுகாப்பு அம்சங்களை 125சிசிக்கு மேற்பட்ட இரு சக்கர வாகனங்களில் கட்டாய அம்சமாக வரும் ஏப்ரல் 2017ம் ஆண்டு முதல் இணைக்க மத்திய போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

இந்தியன் டார்க் ஹார்ஸ்
இந்தியன் டார்க் ஹார்ஸ்
ஏபிஎஸ் மற்றும் சிபிஎஸ் பிரேக் ஆப்ஷன்கள் விற்பனை செய்யப்பட்ட மற்ற பைக்குகளுக்கு ஏப்ரல் 2018ம் ஆண்டு முதல் கட்டாயம் ஆகும்.  விபத்துகளில் அதிக பாதிக்கப்படுவது இரு சக்கர வாகன ஓட்டிகள் தான் என்பதனை கருத்தில் கொண்டே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
ஏபிஎஸ் பிரேக் சிஸ்டம்  பிரேக்கிங் செய்யும்பொழுது சிறப்பான திறனை வெளிப்படுத்தி வாகனம் தடுமாறமல் நிற்கவும் மற்றும் குறைவான தூரத்தில் நிற்கவும் உதவுகின்றது.
மேலும் படிக்க ; ஏபிஎஸ் என்றால் என்ன ?
சிபிஎஸ் என்றால் கம்பைன்டு பிரேக்கிங் சிஸ்டம் அதாவது பிரேக் பிடிக்கும் பொழுது முன் மற்றும் பின் பிரேக்குகள் சீராக புரோபர்ஷனல் கன்ட்ரோல் வால்வ் மூலம் இயங்கி சிறப்பான பிரேக்கிங் கிடைக்க உதவும்.
இரண்டு பாதுகாப்பு அம்சங்களும் தற்பொழுது சந்தையில் விற்பனையில் உள்ள சில குறிப்பிட்ட மாடல்களில் மட்டுமே உள்ளது. ஆனால் 125சிசி க்கு மேற்பட்ட இரு சக்கர வாகனங்களில் மட்டுமே வரவுள்ளதால் அதிகம் சந்தையில் புழங்கும் 100சிசி பைக்குகளில்ஏபிஎஸ் மற்றும் சிபிஎஸ் இருக்காது.
இது நல்லதொரு தொடக்கம் வரவேற்கலாம் ஆனால் 125சிசிக்கு குறைவான சிசி கொண்ட இரு சக்கர மாடல்களே இந்திய சந்தையில் அதிகம் விற்பனை ஆகின்றது என்பதனை கவனிக்க வேண்டும்.
கடந்த ஆண்டில் மட்டும்  35, 524 இருசக்கர வாகன ஓட்டிகள் சாலை விபத்தில் உயிரிழந்துள்ளனர். மேலும் 1.27 லட்சம் பேர் காயமடைந்துள்ளனர்.
ABS & CBS mandatory on two wheelers in India
Exit mobile version