எதிர்பார்த்து ஏமாற்றம் தந்த கார்கள் -2016

0

அடுத்த சில வாரங்களில் 2016 ஆம் வருடத்தை நாம் கடந்து செல்ல உள்ள நிலையில் 2016ல் வரும் என மிகுந்த  எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி வராமல் 2017ஆம் ஆண்டுக்கு தள்ளிபோன சில முக்கியமான கார்களை பற்றி தெரிந்துகொள்ளலாம்.

Chevrolet Spin MPV

Google News

1. செவர்லே ஸ்பின்

ஜிஎம் நிறுவனத்தின் இந்தியாவின் செவர்லே கடந்த சில ஆண்டுகளாகவே விற்பனையில் சரிந்து வரும் நிலையில் ட்ரெயில்பிளேசர் மற்றும் ஸ்பின் எம்பிவி மாடல்களை அறிமுகம் செய்ய உள்ளதாக அறிவித்திருந்த நிலையில் ட்ரெயில்பிளேசர் காரை மட்டும் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ள நிலையில் ஸ்பின் எம்பிவி காரை இந்தியா கொண்டு வரும் திட்டத்தை முழுதாக கைவிட்டுள்ளது. இனி ஸ்பின் எம்பிவி இந்தியா வரும் வாய்ப்புகள் இல்லை என்றே சொல்லாம்.

2. டாடா ஹெக்ஸா

2016 ஆம் ஆண்டில் தீபாவளி பண்டிகை காலங்களில் விற்பனைக்கு வரும் என உறுதியாக எதிர்பார்க்கப்பட்ட டாடா ஹெக்ஸா மாடல் பல்வேறு விதமான காரணங்களால் தள்ளிபோய் வருகின்ற 18 ஜனவரி 2017யில் முறைப்படி விற்பனைக்கு வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

hexa Sky Gray colors

3.  மாருதி சுஸூகி இக்னிஸ்

தொடக்கநிலை சந்தைக்கு ஏற்ற காம்பேக்ட் ரக க்ராஸ்ஓவர் மாடலான சுஸூகி இக்னிஸ் 2016 தீபாவளி பண்டிகையில் உறுதியாக வெளிவரும் என அதிகார்வப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் விட்டாரா பிரெஸ்ஸா மற்றும் பலேனோ கார்களின் அதிரடியான வரவேற்பு மாருதி இக்னிஸ் வரவை வருகின்ற 13 ஜனவரி 2017ல் விற்பனைக்கு வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

maruti suzuki IGNIS concept

 

4. மாருதி பலேனோ RS

பலேனோ காரின் பெர்ஃபாமென்ஸ் ரக மாடலான பூஸ்டர்ஜெட் பொருத்தப்பட்ட பலேனோ ஆர்எஸ் மாடல் இக்னிஸ் போலவே தீபாவளி பண்டிகை வெளியீடாக இருந்த நிலையில் விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவி மற்றும் சாதரன பலேனோ கார்களின் அபரிதமான விற்பனையின் காரணமாக 2017 ஆம் ஆண்டின் பிப்ரவரி அல்லது மாரச் மாதங்களில் வெளியிடும் நிலைக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

5. சாங்யாங் டிவோலி

மஹிந்திரா குழுமத்தின் அங்கமாக விளங்கும் தென்கொரியாவின் சாங்யாங் நிறுவனத்தின் டிவோலி எஸ்யூவி கார் 2016 ஆட்டோ எக்ஸ்போ அரங்கில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த நிலையில் விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் டிவோலி எஸ்யூவி இந்தியா வரும் வாய்ப்புகள் குறைவாகவே உள்ளது. ஆனால் டிவோலி எஸ்யூவி காரின் அடிப்படையிலான மாடலை மஹிந்திரா உருவாக்கி வருவதனால் அடுத்த வருடத்தில் புதிய ரக எஸ்யுவி காரை மஹிந்திரா அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

SsangYong Tivoli suv

6. நிசான் எக்ஸ்-ட்ரெயில்

மீண்டும் இந்தியாவில் புதிய தலைமுறை நிசான் எக்ஸ்-ட்ரெயில் விற்பனைக்கு டிசம்பர் மாதம் வரலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் எக்ஸ்-ட்ரெயில் எஸ்யூவி காரின் வரவினை 2017 ஆம் ஆண்டின் தொடக்க மாதங்களில் அறிமுகம் செய்ய உள்ளதாக நிசான் அறிவித்துள்ளது. டீசல் என்ஜின் மாடலுக்கு மாற்றாக ஹைபிரிட் ஆப்ஷனை நிசான் கொண்டு வரவுள்ளது.

nissan x trail hybrid auto expo 2016

டிவோலி மற்றும் ஸ்பின் கார்களை தவிர மற்றவை வருகின்ற 2016 ஆம் ஆண்டில் விற்பனைக்கு வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் பல சிறப்பு கார்கள் 2016 செய்திகளை ரீவைன்ட் 2016 பகுதியில் அறிந்து கொள்ளலாம்.