Site icon Automobile Tamil

ஏர்பேக் உள்பட 4 அம்சங்கள் கட்டாயம் அக்டோபர் 2017 முதல்

வருகின்ற அக்டோபர் 2017 முதல் இந்தியாவில் ஏர்பேக் ,வேக எச்சரிக்கை, இருக்கை பட்டை  நினைவுபடுத்துதல் மற்றும் ரியர் வீயூ சென்சார் போன்றவற்றை கார்களில் நிரந்தர அம்சமாக சேர்க்க சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

உலகிலேயே அதிக வாகன விபத்துகள் நடைபெறும் நாடுகளில் இந்தியா முன்னிலை வகிக்கின்றது.சராசரியாக இந்தியாவில் வருடத்திற்கு 140,000 நபர்கள் உயிரிழக்கின்றனர். மேலும் 5,50,000 பேர் காயமடைகின்றனர். எனவே வாகன விபத்துகளை கட்டுப்படுத்தும் நோக்கிலும் விபத்தில் ஏற்படும் உயிரிழப்பினை தடுக்கும் நோக்கில் மத்திய அரசு பாதுகாப்பு அம்சங்களை நிரந்தரமாக்கி உள்ளது. அக்டோபர் 2017க்கு பிறகு விற்பனைக்கு வரவுள்ள அனைத்து கார்களிலும்…

  1. காற்றுப்பை
  2.  வேக எச்சரிக்கை
  3. இருக்கை பட்டை  நினைவூட்டல்
  4. ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்

ஏர்பேக்

பாதுகாப்பு அம்சங்களில் மிக முக்கியமான ஒன்றாக கருதப்படும் காற்றுப்பையை நிரந்தர அம்சமாக அனைத்து கார்களில் இணைக்கப்படுவது உறுதியாகியுள்ளது.

வேக எச்சரிக்கை

வாகனத்தின் வேகத்தினை உணர்ந்து அதற்கு ஏற்ப எச்சரிக்கையை வெளிப்படுத்தும் வகையில் வேக எச்சரிக்கை கருவி பயன்படுத்தப்பட்டிருக்கும். மணிக்கு 80 கிமீ வேகத்தை எட்டும் பொழுது பீப் ஆடியோ எச்சரிக்கை தோன்றும் , மணிக்கு 100 கிமீ வேகத்தை தொடும்பொழுது தொடர்ச்சியாக ஆடியோ பீப் சப்தம் வரும்.

இருக்கை பட்டை நினைவூட்டல்

சீட் பெல்ட் அணிவதற்கு தொடர்ச்சியாக நினைவுப்படுத்தும் அம்சமாக சேர்க்கப்பட உள்ளது.

ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்

வாகனங்களை ரிவர்ஸ் எடுக்கும்பொழுது ரியர் வீயூ மிரர் வாயிலாக மிக சிறப்பாக பின்புறத்தில் உள்ள பொருட்கள் அல்லது மற்றவற்றை பார்ப்பது கடினமாக இருக்கும் என்பதனால் அவற்றை உணர்ந்து கொள்ளும் வகையில்  ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார் உதவும்.

வருகின்ற அக்டோபர் 2017 முதல் இந்தியாவில் விற்பனை செய்யப்படும் அனைத்து கார்களுக்கும் பாரத் கிராஷ் டெஸ்ட் சோதனைகள் நடைமுறைக்கு வரவுள்ளது. முன்பக்கத்தில் 64 கிமீ வேக்கத்திலும் பக்கவாட்டில் 50 கிமீ வேகத்தில் மோதலை நடத்தி கிராஷ் டெஸ்ட் செய்யப்பட உள்ளது.

Exit mobile version