ஐஷர் புரோ6037 டிரக் விற்பனைக்கு அறிமுகம்

0

வால்வோ மற்றும் ஐஷர் கூட்டணியில் செயல்படும் வால்வோ-ஐஷர் வர்த்தக வாகன நிறுவனத்தின் ஐஷர் புரோ6037 டிரக் 37 டன் எடை பிரிவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

eicher-pro6037-truck

37 டன் பேலோடு திறன் கொண்டுள்ள புரோ6037 லாரி முதன்முறையாக 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ கண்காட்சி வாயிலாக அறிமுகம் செய்யப்பட்டதை தொடர்ந்து விற்பனைக்கு வந்துள்ள டிரக்கில் 5.0 லிட்டர் VEDX என்ஜின் இருவிதமான் டிரைவிங் மோடில் செயல்படும் பவர் மோடில் 210 hp ஆற்றல் மற்றும் 825 Nm இழுவைதிறனை வெளிப்படுத்தும். ஈக்கோ மோடின் வாயிலாக  160 hp ஆற்றல் மற்றும் 560 Nm இழுவைதிறனை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ள ஈகோ மோடில் சிறப்பான மைலேஜ் கிடைக்க உதவும். இதில் 9 வேக கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.

புரோ6037 டிரக்கில் M பூஸ்டர் , EMS 2.0 , க்ரூஸ் கன்ட்ரோல் , நேரலையான நேரத்தில் எரபொருள் சிக்கனம் மற்றும் ட்ரிப் மேனேஜ்மென்ட் வசதி , ஐஷர் டிரைவ் டெலிமேட்டிக்ஸ் என  பல நவீன வசதிகளுடன் கிடைக்கின்றது.

VECV (volvo eicher commercial vehicles) நிறுவன தலைமை செயல் அதிகாரி  திரு.வினோத் அகர்வால் கூறுகையில்.. கனரக வாகன பிரிவில் வளர்ச்சியில் புதிய உயரத்தினை எட்டும் நோக்கில் டிரக்குகளை மேம்படுத்தி சிறப்பான உட்கட்டமைப்பினை ஏற்படுத்தும் வகையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மிக வேகமாக வளர்ந்து வரும் 37 டன் பிரிவில் ஐஷர் நிறுவனத்தின் சந்தை பங்களிப்பு 5 சதவீதமாக உள்ளது. மேலும் ஒவ்வொரு தனிப்பட்ட வாடிக்கையாளர்களுக்கும் தேவையான கஸ்டமைஸ் வழிகளையும் ஐஷர் வழங்குகின்றது. வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான சேவையை வழங்குவதுடன் இந்திய டிர்க்கிங் துறையை புதிய தளத்திற்கு கொண்டு செலவதே நோக்கம் என தெரிவித்துள்ளார்.

37 டன் பிரிவில் 75 சதவீத சந்தை பங்களிப்பினை கொண்ட முன்னனி நிறுவனமாக அசோக் லேலண்ட் விளங்குகின்றது.