ஐஷர் – போலாரிஸ் இணைந்து விவசாய டிரக் தயாரிக்க திட்டம்

0
ஐஷர் மற்றும் போலாரிஸ் நிறுவணங்கள் இணைந்த விவசாயத்திற்க்கு தேவையான இடுபொருட்களை எடுத்து செல்லக்கூடிய வகையில் இலகுரக டிரக்களை தயாரிக்க திட்டமிட்டுள்ளனர்.

சிறிய ரக டிரக்கள் மிக குறைவான விலையிலும் சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்தக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட உள்ளது. கரடுமுரடான சாலைகளில் பயணிக்கும் வகையில் உருவாக்க உள்ளனர்.

ஐஷர்

ஐஷர் மற்றும் போலாரிஸ் இணைந்து ரூ.250 கோடி முதலீட்டில் தொடங்க உள்ளனர். ஆண்டிற்க்கு 10000 முதல் 12000 வாகனங்களை விற்பனை செய்ய இலக்கு வைத்துள்ளனர்.

600சிசி க்ரீவஸ் காட்டன் என்ஜின் பொருத்தப்பட உள்ளது. விவசாய பயன்பாட்டிற்க்கு தயாரிக்கப்படும் இலகுரக டிரக் என்பதால் மிகுந்த வரவேற்பினை பெற வாய்ப்புள்ளது.