கிங்மேக்கர் கார்கள் – 2015

0

2015 ஆம் வருடத்தில் கார்களில் யார் ? என கிங்மேக்கர் கார்கள் 2015 பதிவில் தெரிந்துகொள்ளலாம். ஒட்டுமொத்த இந்திய சந்தையை புரட்டி போட்ட இந்த கார்கள் நிச்சியமாக வாடிக்கையாளர்கள் மனதில் நீங்க இடம்பிடிக்கும் கிங்மேக்கர்களாகும்.

Hyundai-2BCreta-2Bsuv

Google News

ஹூண்டாய் க்ரெட்டா

இந்திய ஹூண்டாய் மோட்டார்ஸ் விற்பனை வரலாற்றில் முதன்முறையாக புதிய உச்சத்தை எட்ட வைத்த மாடல்களில் ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவி காருக்கு தனி இடம் உள்ளது.

காம்பேக்ட் ரக எஸ்யூவி கார்களில் ” தி பெர்ஃபெக்ட் எஸ்யூவி ” என்ற டேக்லைனுடன் வந்த க்ரெட்டா அனைத்து காம்பேக்ட் ரக மாடல்களுக்கும் சிம்ம சொப்பனமாக அமைந்துள்ளது. காம்பேக்ட் ரக தொடக்க பிரிவு கார்கள் முதல் இறுதி நிலைக்கு மேல் உள்ள அனைத்து மாடல்களுக்கும் சவாலாக அமைந்துள்ள க்ரெட்டா காரின் போட்டியாளர்கள் ஈக்கோஸ்போர்ட் , டியூவி300 , டஸ்ட்டர் , டெரானோ , எஸ் க்ராஸ் , ஸ்கார்ப்பியோ , எக்ஸ்யூவி500 என அனைத்து மாடல்களின் சந்தையையும் புரட்டி போட்டுள்ளது.

1.4 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் , மேலும் 1.6 லிட்டர் டீசல் என மூன்று விதமான ஆப்ஷனுடன் 6 வேக மெனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் போன்ற ஆப்ஷனை பெற்று விளங்குகின்றது.

விற்பனைக்கு வந்த 5 மாதங்களில் 92,000 முன்பதிவுகளை கடந்துள்ளது. இன்னும் சில தினங்களில் 1 லட்சம் முன்பதிவுகளை தாண்ட உள்ள நிலையில் வெளிநாடுகளிலும் 16,000 ஆர்டர்களுக்கு மேல் பெற்றுள்ளது.

இந்தியர்களின் எஸ்யூவி தாகத்திற்க்கு மிக சரியான தீர்வாக அமைந்துள்ள ஹூண்டாய் க்ரெட்டா நிச்சியமாக இந்திய சந்தையின் கிங்மேக்கர் கார்களில் முதன்மை வகிப்பதில் ஆச்சிரியம் ஒன்றுமில்லை. இந்தியாவின் சிறந்த கார் 2016 விருதினை க்ரெட்டா வென்றுள்ளது.

creta

ரெனோ க்விட்

முதல் தலைமுறை மற்றும் குறைந்த விலை கார்களை வாங்க நினைப்பவர்களுக்கு மாருதி சுசூகி மட்டுமே தீர்வாக  அமைந்து வந்த நிலை தற்பொழுது மாற தொடங்கியுள்ளதால் இனி கடுமையான சவாலினை மாருதி சுசூகி எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

சின்ன கார் , எஸ்யூவி போன்ற கவர்ச்சியான ஸ்டைல் , அதிக வசதிகள் , கூடுதல் இடவசதி , குறைந்த விலை என அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்துள்ள ரெனோ க்விட் சிறப்பான புதிய ஆரம்பத்தினை மீண்டும் இந்திய சந்தையில் ஏற்படுத்தியுள்ளது.

ரெனோ க்விட் கார்

டஸ்ட்டர் வருகைக்கு பின்னர் காம்பேக்ட் எஸ்யூவி கார்களின் டிரென்டிங்கை உருவாக்கியது போல க்விட் காரை கொண்டு மீண்டும் ரெனோ உருவாக்கியுள்ளது. கடந்த சில மாதங்களாக தன் ஒட்டுமொத்த விற்பனையில் 50 % பங்கினை ரெனோ க்விட் பெற்று ரெனோ நிறுவனத்தின்வ வரலாற்றில் புதிய மாத விற்பனை இலக்கினை தொடங்க காரணமாக அமைந்தது.

ரெனோ க்விட் காரின் 97 % பாகங்கள் இந்தியாவிலே உருவாக்கப்படுவது  , எஸ்யூவி போன்ற ஸ்டைல் , குறைவான விலை இந்தியர்களின் மனநிலையை மிக சரியாக கனித்து ரெனோ நிறுவனம் உருவாக்கியதால் க்விட் மாபெரும் வெற்றியை பதிவு செய்து வருகின்றது.

இந்தியாவில் அதிக விற்பனையை பதிவு செய்து வரும் முதன்மாயான மாருதி ஆல்ட்டோ 800 காருக்கு மிகுந்த நெருக்கடியை ஏற்படுத்தி மாருதி ஆல்ட்டோ 800 காரை தடுமாற வைத்துள்ளது. மேலும் இதன் போட்டியாளர்களாக நானோ , இயான் போன்றவையும் உள்ளது.

லிட்டருக்கு 25.17 கிமீ மைலேஜ் தரவல்ல க்விட் காரில் 800சிசி என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதில் 5 வேக கியர்பாக்ஸ் உள்ளது. மேலும் வரும் காலத்தில் கே10 , கே10 ஏஎம்டி மாடலுகளுடன் போட்டியை ஏற்படுத்தும் வகையில் ரெனோ க்விட் ஏஎம்டி , 1 லிட்டர் என்ஜின் க்விட் போன்றவை ஆட்டோ எக்ஸ்போ 2016 கண்காட்சியில் வரவுள்ளது.

இந்திய சந்தையின் கிங்மேக்கர் கார்கள் ரெனோ க்விட் காரும் விளங்குகின்றது.

renault kwid rear