ரியோ ஒலிம்பிக் 2016-ல் மகளிர் 58 கிலோ எடை பிரிவில் இந்தியாவுக்கு முதல் பதக்கத்தை வென்ற சாக்ஷிக்கு மஹிந்திரா தலைவர் ஆனந்த மஹிந்திரா தார் எஸ்யூவி காரை பரிசளிக்க உள்ளதாக தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
சாக்ஷி மாலிக் வெண்கலப் பதக்கம் வென்று இந்தியாவின் முதல் பதக்க வேட்டையை தொடங்கி உள்ள நிலையில் சாக்ஷிக்கு வாழ்த்துக்களும், பாராட்டுகளும் , பரிசுகளும் குவிந்த வண்ணம் உள்ளது . ஹரியானா மாநில அரசு சாக்ஷிக்கு 2.5 கோடி மற்றும் ஸ்போர்ட் கோட்டாவில் அரசு வேலை வழங்கியுள்ளது. மேலும் ரயில்வே அமைச்சகம் சார்பாக 60 லட்சம் , இந்தியன் ஓலிம்பிக் சங்கம் சார்பில் 20 லட்சம் வழங்கப்பட உள்ளது. தற்பொழுது ஆனந்த மஹிந்திரா நேற்று வெளியிட்டுள்ள டிவிட்டர் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
updated : மகளிர் பேட்மிண்டன் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்ணை என்ற புதிய வரலாறு படைத்த பி.வி. சிந்துக்கும் மஹிந்திரா தார் எஸ்யூவி காரை வழங்குவதாக ஆனந்த மஹிந்திரா தெரிவித்துள்ளார்.
டிவிட்டர் செய்தி
Tweets by anandmahindra
இந்தியாவின் பிரசத்தி பெற்ற எஸ்யூவி கார்களில் ஒன்றான மஹிந்திரா தார் எஸ்யூவி காரில் 63எச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 2.5 லிட்டர் DI என்ஜின் மற்றும் 105எச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 2.5 CRDe என்ஜினும் பொருத்தப்பட்டிருக்கும். 5 வேக மெனுவல் கியர்பாக்ஸ் பயன்படுத்தியுள்ளனர்.
மிக சிறப்பான ஆஃப் ரோடு வாகனமான தார் எஸ்யூவி எந்த சாலையிலும் பயணிக்கும் வகையிலான சிறப்பு அம்சங்களை கொண்டதாகும் காடு , மலை என எதிலும் பயணிக்கும் வகையில் ஆல் வீல் டிரைவ் ஆப்ஷனுடன் சேறு , சகதி மற்றும் க்ரீப் கிடைக்காத இடங்களிலும் சிறப்பாக இயங்கும் வகையில் லாக்கிங் டிஃப்ரன்ஷியல் பொருத்தப்பட்டுள்ளது.
மேலும் படிக்க ; மஹிந்திரா தார் எஸ்யூவி முழுவிபரம்
பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் அடுத்த தலைமுறை பல்சர் பைக் வரிசையில் முதன்முறையாக 250சிசி இன்ஜின் பெற்ற மாடல் விற்பனைக்கு வெளியிடப்படலாம்…
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் 10 கோடி பைக்குகளின் உற்பத்தியை கொண்டாடும் வகையில் வெளியிட்டுள்ள எக்ஸ்ட்ரீம் 160R 100 மில்லியன் எடிஷன்…
அடுத்த சில நாட்களில் விலை அறிவிக்கப்பட உள்ள புதிய 2021 கவாஸாகி நின்ஜா 300 பைக்கின் படங்கள் வெளியாகியுள்ளது. ஆனால்…
5 இருக்கை கிரெட்டா காரின் அடிப்படையிலான 6 மற்றும் 7 இருக்கை பெற்றதாக ஹூண்டாய் அல்கசார் எஸ்யூவி என்ற பெயரில்…
இரு வண்ண கலவை நிறத்தை பெற்ற புதிய 2021 மாருதி ஸ்விஃப்ட் ஃபேஸ்லிஃப்ட் மாடல் ரூ.5.73 லட்சம் முதல் அதிகபட்சமாக…
சர்வதேச அளவில் பல்வேறு நாடுகளில் விற்பனை செய்யப்படுகின்ற டொயோட்டா RAV4 க்ராஸ்ஓவர் எஸ்யூவி இந்தியாவில் சாலை சோதனை ஓட்டத்தில் ஈடுபடுகின்ற…