சூப்பர் ஹிட் கார்கள் 2016 – பிளாஷ்பேக்

2016 ஆம் ஆண்டில் இந்தியாவில் விற்பனைக்கு வந்த கார்களில் ஆட்டோமொபைல் ஆர்வல்களை  மனதை கவர்ந்த சூப்பர் ஹிட் கார்கள் 2016 பற்றி பிளாஷ்பேக் பகுதியில் அறிந்து கொள்ளலாம். கார்கள் மட்டுமே இந்த செய்தி தொகுப்பில் சேர்க்கப்பட்டுள்ளது.

விற்பனைக்கு வந்த கார்களில் டிசைன் , விற்பனை எண்ணிக்கை , சிறப்பு வசதிகள் மற்றும் ஆட்டோமொபைல் தளத்தில் அதிகம் பார்வையாளர்களை பெற்ற கார்களை கொண்டே இந்த பட்டியல் வரிசைபடுத்தப்பட்டுள்ளது. இந்த பகுதியில் ஹேட்ச்பேக் , செடான் மற்றும் எம்பிவி ரக கார்கள் மட்டும் சேர்க்கப்பட்டுள்ளது.

1. டாடா டியாகோ

பல வருடங்களுக்கு பிறகு டாடா மோட்டார்சின் தயாரிப்பில் மிக சிறப்பான மாடலாக வெளிவந்துள்ள டியாகோ கார் விற்பனைக்கு வந்தது முதலே அமோக ஆதரவினை பெற்று விளங்குகின்றது. டாடா நிறுவனத்தின் புதிய இம்பேக்ட் டிசைன் தாத்பரியங்களால் வடிவமைக்கப்பட்டு சிறப்பான தோற்ற பொலிவுடன் பல நவீன வசதிகள் மற்றும் டாடாவின் ரெவோடார்க் டீசல் மற்றும் ரெவோட்ரான் பெட்ரோல் என்ஜின்களை பெற்று சிறப்பான இன்டிரியர் தரமான உட்கட்டமைப்பு மற்றும் அடிப்படை பாதுகாப்பு அம்சங்களாக ஏபிஎஸ் மற்றும் ஏர்பேக் போன்றவற்றை பெற்றுள்ளது.

சரிந்திருந்த டாடா நிறுவனத்தின் சந்தையை உயரத்தை நோக்கி பயணிக்க வைத்த டாடா டியாகோ கார் நமது சூப்பர் ஹிட் கார் பட்டியலில் முதலிடத்தை பிடிக்கின்றது.

மேலும் படிக்க ; டாடா டியாகோ பற்றி விபரங்கள்

2. ஃபோக்ஸ்வேகன் எமியோ

மேக் இன் இந்தியா கோஷத்துடன் களமிறங்கிய உலகின் முன்னனி கார்த தயாரிப்பாளரான ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் அமியோ காம்பேக்ட் செடான் ரக கார் சரிந்திருந்த போக்ஸ்வேகன் இந்தியாவின் விற்பனையை அதிகரித்தது மட்டுமல்லாமல் காம்பேக்ட் ரக செடான் பிரிவில் அமோக ஆதரவினை பெற்றுள்ள எமியோ காரில் டீசல் மற்றும் பெட்ரோல் என்ஜின் ஆப்ஷனுடன் மிக சவாலான விலையில் கிடைக்கின்றது.

மேலும் படிக்க ; ஃபோக்ஸ்வேகன் அமியோ பற்றி விபரங்கள்

 

3. டட்சன் ரெடி-கோ

ரெனோ – நிசான் கூட்டணியில் உருவான CMF-A பிளாட்பாரத்தில் வடிவமைக்கப்பட்ட டட்சன் ரெடி-கோ கார் மாடலானது புகழ்பெற்ற ரெனால்ட் க்விட் காரின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்ட பட்ஜெட் ரக மாடலாகும். குறைந்த விலை மாடலுக்காகவே தொடங்கப்பட்ட நிசான் டட்சன் பிராண்டில் வெளிவந்த கோ மற்றும் கோ + கார்கள் படுதோல்வியை தழுவிபின்னர் மிக சிறப்பான டிசைன் மற்றும் கூடுதல் தரத்தை மையப்படுத்தியதுடன் க்விட் காரின் அடிப்படை மற்றும் க்ராஸ்ஓவர் ரக டிசைன் , க்விட் காரில் பொருத்தப்பட்டிருந்த அதே 800சிசி என்ஜின் போன்ற காரணங்களால் நிசான் நிறுவத்தின் விற்பனை வளர்ச்சியை 100 சதவீதம் உயர்த்தி  ரெடி-கோ வெற்றி பெற்றுள்ளது.

மேலும் படிக்க ; ரெடி-கோ கார் பற்றி விபரங்கள்

 

4. டொயோட்டா இன்னோவா க்ரீஸ்டா

தரத்தில் எவ்விதமான சமரசமும் செய்து கொள்ளாத டொயோட்டா நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் புதிய தலைமுறை டொயோட்டா இன்னோவா க்ரீஸ்ட்டா எம்பிவி கார் முந்தைய தலைமுறை மாடலை விட சுமார் ரூ.4 லட்சம் விலை அதிகரிக்கப்பட்டிருந்தாலும் நெ.1 எம்பிவி காராக தொடர்ந்து விளங்கி வருகின்றது.  பெட்ரோல் மற்றும் இரண்டு டீசல் எஞ்ஜின் ஆப்ஷன் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மற்றும் உயர்தர பாதுகாப்பு அம்சங்களை கொண்ட காராக இன்னோவா விளங்குகின்றது.

மேலும் படிக்க ; டொயோட்டா இன்னோவா க்ரீஸ்ட்டா பற்றி விபரங்கள்

5. மஹிந்திரா கேயூவி100

தொடக்கநிலை ஹேட்ச்பேக் கார்களுடன் போட்டியிடும் வகையிலான மாடலாக அறிமுகம் செய்யப்பட்ட மினி எஸ்யூவி கார் மாடலான மஹிந்திரா கேயூவி100 காரின் வாயிலாக மிக நேர்த்தியான டிசைன் மற்றும் வசதிகளை மஹிந்திரா தந்திருந்தது. மேலும் எம் ஃபால்கன் என்ற புதிய பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின்களை இந்த மாடலில் சேர்த்துள்ளது. இளம் வாடிக்கையாளர்களை மையப்படுத்தி அறிமுகம் செய்யப்பட்ட கேயூவி100  பெரும்பாலனவர்களின் கவனத்தை பெற்றுள்ளது.

மேலும் படிக்க ; மஹிந்திரா கேயூவி100 பற்றி விபரங்கள்

Share