Automobile Tamilan

சூரிய சக்தியில் இயங்கும் ஸ்டெல்லா லக்ஸ் குடும்ப கார்

சூரிய சக்தியின் மூலம் இயங்கும் உலகின் முதல் குடும்ப கார் ஸ்டெல்லா லக்ஸ் மிக சிறப்பான நவீன வசதிகளுடன் விளங்குகின்றது. ஸ்டெல்லா லக்ஸ் ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 1000கிமீ வரை பயணிக்க முடியும்.
ஸ்டெல்லா லக்ஸ் சோலார் கார்
ஸ்டெல்லா லக்ஸ் கார் குழு

நெதர்லாந்து நாட்டில் உள்ள பிரசத்தி பெற்ற எயிந்தோவன் பல்கலைகழக மாணவர்களால் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ஸ்டெல்லா லக்ஸ் சோலார் கார் புதிதல்ல . இது இவர்களுக்கு இரண்டாவது முறையாக தயாரித்த காராகும்.

சோலார் டீம்  எயிந்தோவன் குழுவில் மொத்தம் 21 மாணவர்கள் உள்ளனர் இவர்களின் முழுஉழைப்பில் உருவாக்கப்பட்டுள்ள இந்த காரில் 5.8சதுரமீட்டருக்கு சோலார் செல்கள் பொருத்தியுள்ளனர். மேலும் கூடுதலாக மணிக்கு 15கிலோவாட் தரவல்ல எலக்ட்ரிக் மோட்டாரையும் ஸ்டெல்லா லக்ஸ் காரில் பொருத்தியுள்ளனர்.

 சூரிய சக்தி குடும்ப காரில் 4 நபர்கள் அமர்ந்து பயணிக்க முடியும். ஸ்டெல்லா லக்ஸ் வேகம் மணிக்கு 125கிமீ ஆகும். கார்பன் ஃபைபர் மற்றும் அலுமினியத்தால் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த சோலார் கார் எடை வெறும் 375கிலோ மட்டுமே.

சோலார் நேவிகேஷன் அமைப்பின் மூலம் காலநிலை அறிந்து அதற்கேற்ப சாலையை தேர்ந்தேடுக்கும். ஸ்மார்ட்போன் மொடர்பு , தொடுதிரை அமைப்பு என பல நவீன அம்சங்களை ஸ்டெல்லா லக்ஸ் சோலார் கார் பெற்றுள்ளது.

2013ம் ஆண்டில் இதே குழு தயாரித்த ஸ்டெல்லா என்ற சோலார் மாடல் க்ருஸர் கிளாஸ் உலக சோலார் சேலஞ்ச் பட்டத்தை வென்றது.

ஸ்டெல்லா லக்ஸ் குடும்ப கார்

இந்த சோலார் டீம்  எயிந்தோவன் வரும் ஆக்டோபரில் ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள  பிரிட்ஜ்ஸ்டோன் உலக சோலார் சேலஞ்ச் போட்டியில்  கலந்த கொள்ள உள்ளது.

ஸ்டெல்லா லக்ஸ் குடும்ப கார் வீடியோ

[youtube https://www.youtube.com/watch?v=A-JeEV2R4bw]

Solar-powered Stella Lux family car generates more power

Exit mobile version