சென்னையில் டொயோட்டா ஓட்டுநர் பயிற்சி பள்ளி திறப்பு

0

டொயோட்டா கிரிலோஷ்கர் நிறுவனத்தின் ஓட்டுநர் பயிற்சி பள்ளி முதன்முறையாக தமிழ்நாட்டில் சென்னையில் திறக்கப்பட்டுள்ளது. பள்ளிக்கரனையில் அமைந்துள்ள லேன்சன் டொயோட்டா டீலரில் தொடங்கப்பட்டுள்ளது.

toyota-driving-school

கடந்த மார்ச் 2015யில் முதன்முறையாக லக்னோவில் தொடங்கப்பட்ட டொயோட்டா டிரைவிங் ஸ்கூல் தற்பொழுது ஹைத்திராபாத் , கொச்சி மற்றும் சென்னை என மொத்தம் 4 நகரங்களில் செயல்பட்டு வருகின்றது. பாதுகாப்பான கார் , பாதுகாப்பான ஓட்டுநர் என்ற நோக்கத்துடன் தொடங்கப்பட்டுள்ள ஓட்டுனர் பள்ளியில் வாகனத்தினை பற்றிய அடிப்படை விசயங்கள் முதல் சாலை விதிமுறைகள் , பாதுகாப்பு அம்சங்கள் , சாலை ஒழுக்கம் என பலவற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் டொயோட்டா இந்தியா பயிற்சி பள்ளி செயல்பட்டு வருகின்றது.

காரில் தெரிந்துகொள்ள வேண்டிய அடிப்படை அம்சங்களான துனைவீலை மாற்றுவது , ஸ்டார்ட்டிங் பிரச்சனை , பேட்டரி பிரச்சனை போன்ற சமயங்களில் எவ்வாறு செயல்படுவது  மேலும் முதலுதவி , ஆபத்து காலங்களில் செய்ய வேண்டியவை  என்ன , ஓட்டுனருக்கான உடை அணியும் முறைகள் , அதிக தொலைவு பயணங்களில் கையாள வேண்டிய நடைமுறைகள் என பலவற்றை கற்றுதரும் பயிற்சி பள்ளியாக செயல்படும்.

ஸ்டார்ட் , ஸ்மார்ட் என இருவிதமான பாடத்திட்டத்தினை கொண்டுள்ள டொயோட்டா ஓட்டுனர் பயிற்சி பள்ளியில் ஸ்டார்ட் பாடமானது தொடக்கநிலை ஓட்டுனர்களுக்கும் , ஸ்மார்ட் பாடம் டாக்சி டிரைவர்கள் போன்றவர்களுக்கு மேம்பட்ட பயற்சி அளிக்கப்பட்டு வருகின்றது.